சோரியாசிஸ் என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது. சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
சோரியாசிஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் தொழு நோயினர் என்றே கருதி வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 – ல் ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம் இது தொழு நோயிலிருந்து மாறுபட்ட ஒரு சரும நோய் என நிரூபித்துக் காட்டினார்.
ஏறக்குறைய உலக மக்கட் தொகையில் ஓரு சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சோரியாசிஸ்
நோயாளிகள் உள்ளனர். தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும். பல நேரங்களில் இது பொடுகு, படை, எக்ஸிமா என்று தவறாகக் கூறி மருத்துவம் செய்யப்படுவதுமுண்டு.
நிரந்தரமாகக் குணமாகாத இந்நோய் மறைவதும் பின்னர் தோன்றுவதும் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்று. டாக்டர் மாற்றி டாக்டர், மருந்து மாற்றி மருந்து என்று இவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. நெடு நாட்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இது எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளினாலும் இது தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மன இறுக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் போதும், சிலவகை மருந்துகள் உட்கொள்ளும் போதும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாற்று முறை மருத்துவர்கள் இதை வேரோடு அறிந்து விட முடியும் என்று கூறினாலும் அது போன்றதொரு மருந்து இது வரை வந்ததாகத் தெரியவில்லை. இதை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது போனாலும் சில வகை ஆங்கில மருந்துகள் இந்நோயின் தாக்கத்தையும் அது தரும் தொல்லையையும் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன.
சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும். தயிரையும் தவிர்க்கவும்.
கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்.
வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும். குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.
கீழ்க்கண்டவற்றை களிம்பாக செய்து பாதிக்கப்பட்ட மேனியில் தடவலாம் – பாதாம், மல்லிகை.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011
சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 90 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
அனைவருக்கும் பகிருங்கள்.
இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
9566750595
My video link.
https://youtu.be/7sm2UQbC_N4
சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த சோரியாசிஸ் நோய் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் நேரில் வரவும் அதற்கு அழைக்கவும். காலை 9 மணியில் இருந்து இரவு 6 மணிவரை. மருந்து நேரில் வந்தால் மட்டுமே கிடைக்கும்.
அனைவருக்கும் பகிருங்கள்.
இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
அரவக்குறிச்சி-639207 உடுமலை-642122
9566750595...
https://psoriyasiscuretreatment.blogspot.com/
ReplyDelete#காளாஞ்சகப்படை #Psoriasis (சொரியாசிஸ்) மற்றும் அனைத்து வகையான #தோல்நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.
ReplyDeleteவிபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.
https://skin-disesis.blogspot.com/