தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

இரத்தக்குழாய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நியூரோபதி


அதிகமாக சர்க்கரை நோயாளிகளை தாக்குவது நரம்பு மண்டல பாதிப்புகளும், இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். இவையே, பல பிரச்சினைகளான பாதப்புண்கள், கண் பாதிப்புகள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.
ரத்த நாளங்கள் வேறு. நரம்புகள் வேறு. ரத்த நாளங்கள் இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்லும் குழாய்கள். நரம்புகள் மூலம் சக்தி, மூளையின் ஆணைகள், செயல்பாடுகள் எல்லாம் கடத்தப்படுகின்றன. நரம்புகள் மூளைக்கு செய்திகளை ஒரு மணிக்கு 290 கி. மீ. வேகத்தில் அனுப்புகின்றன!
சர்க்கரை நோயால் ஏற்படும் ரத்த நாள பாதிப்புகள்
டயாபடிஸ் உடலின் எல்லா அவயங்களையும் பாதிக்கும். இவை நீரிழிவு தோன்றிய சில மாதங்களிலேயே ஏற்படலாம் இல்லை சில வருடங்களில் ஏற்படலாம்.
அதிக சர்க்கரை பெரிய, சிறிய ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும். இதற்கு முன்னால் கல்லீரலின் வேலையை டயாபடிஸ் பாதிப்பதால், கொழுப்புகள் அதிகமாகும். இவை ரத்தக் குழாய்களின் படிந்து, இரத்தப் பாதையை சுருக்கும். சிறிய தந்துகிகள் கூட ரத்தம் பெற முடியாமல் பாதிப்படையும். ரத்தக் குழாய்கள் சுருங்கினால், இதயம் அதிகமாக ‘பம்ப்’ செய்ய நேரிடும். இரத்த அழுத்தம் ஏறும். மூளை, இதயம் போன்ற மிக முக்கிய அவயங்கள் பழுதடைந்து போனால் அப்புறம் என்ன? மாரடைப்பு, கை கால் இழுத்துக் கொண்டு பக்கவாதங்கள் வரும் ஆண்மை குறைவு உண்டாகும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் இந்த மாதிரி தமனிகள் கொழுப்பு படிவதினால் பாதிப்பதை ‘ஆதெராக்ளோரோசிஸ்’ என்பார்கள். இந்த வியாதி டயாபடிஸ் இல்லாதவர்களை விட, இருப்பவர்கள் 2 – 6 தடவை அதிகமாக தாக்கப்படுவார்கள்.
இந்த ரத்தக்குழாய்கள் பாதிப்புகள் முதலில் வெளியே தெரிவதில்லை. ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் அவயங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைப்படும். ஆக்சிஜன் இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை. திசுக்கள் இறந்து விடும். கழிவுப் பொருட்கள் உடலை விட்டு வெளிறோது. பல சிக்கல்கள் உருவாகும்.
இரத்தக்குழாய்களின் சுவர்கள் தடிமனடைவது. இரத்தக் குழாய்களின் மீள்திறன் குறைந்து விடுவது. இரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்பு படிவது இவை  ஏற்படும்.
இரத்தக்குழாயின் வழியே செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடுகின்றது. இதனால் உடலின் ஒவ்வொரு செல்லும் தேவையான உயிர்ச்சத்துகளையும் பிராண வாய்வையும் பெற முடியாமல் தவிக்கின்றன. அதிகளவு இரத்தத்தை செலுத்திட முயன்று இதயம் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த ஓட்டமும் அதிகமாகின்றது. இதயம் பாதிக்கப்படுகின்றது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.
உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் நரம்புகளுக்கும் தேவையான சத்துக்களும் பிராண வாயுவும் இரத்தம் மூலமாகவே கிடைக்கின்றது. இரத்த ஓட்டம் தடைபடுவதால் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது. பொதுவாக நரம்புகளை இரு வகையாக பிரிக்கலாம்.
இயக்க நரம்புகள்- இவை மூளையிலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு கட்டளைகளை எடுத்துச்செல்பவை, தசைகளை இயக்குபவை.
உணர்வு நரம்புகள்- இவை உடலின் பிற உறுப்புகளிலிருந்து மூளைக்கு உணர்வுகளை (சூடு, குளிர், அதிர்வு, வலி, அழுத்தம் போன்றவை) எடுத்துச் செல்பவை.  நீரிழிவு நோயின் பாதிப்பால் இவ்விரு வகை நரம்புகளும்  பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருப்பதால் இது ஏற்படுகின்றது.  வளர்சிதை மாற்ற கோளாறுகளால் குளுகோஸ் சரியாக உடலில் ஏறாமல் போகும் இரத்த சப்ளையும் குறைந்து போவதால், நரம்புகள் நலிவடைகின்றன தீடிரென கால்கள் பலவீனமடையும். மரத்துப்போகும். கால்களில் உணர்ச்சி குறையும். நரம்புகள் நாளாக நாளாக மோசமாக பாதிக்கப்படும். நரம்பு பாதிப்புகள் பல வகைகளில் வெளிக்காட்டும். ஒரு நரம்பு பாதித்தால் ஒரு கையோ, காலோ திடிரென்று பலமிழந்து போகும். கை, கால், பாதம் இவைகள் பாதிக்கப்பட்டால், உணர்ச்சிகள் குறையும். கால் பாதங்களின், விரல்களில் தீ வைத்தால் போல் எரியும். இரவில் இந்த வலிகள் அதிகமாகலாம். ஊசி குத்துவது போல் வலிக்கும்.
வலி, சூடு தெரியாமல் போய், நோயாளிகள் தாங்களாகவே காயங்களை ஏற்படுத்தி கொள்ளும் நிலையும் ஏற்படலாம். மூட்டுகள் காயப்படும். இதற்கு சார்காட் ஜாயின்ட்ஸ் என்பார்கள். மத்திய நரம்பு மண்டலத்தின் தானியங்கி நரம்புகள், ரத்த அழுத்தம், இருதய துடிப்பு, ஜீரணம், உமிழ் நீர் சுரப்பது, சிறுநீர் போவது போன்ற செயல்பாடுகளை நடத்துகின்றன. இவற்றை டயாபடீஸ் தாக்கும்.
நாம் உடலின் ஏற்படும் வலியை உணர உதவும் நரம்புகளை, டயாபடீஸ் சேதப்படுத்தும். மேலே சொன்ன சார்காட் ஜாயின்ட்ஸ்க்கும் ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸீக்கும் முதலில் ஏற்படும் அறிகுறிகள் ஒன்றாக காணப்படுவதால், டாக்டர்களுக்கே குழப்பம் வரும்.
நீரிழிவு நோய் இருக்கும் காலத்தின் அளவைப் பொறுத்தும் இரத்தக்குழாய் மற்றும் நரம்புகளின் பாதிப்பு அதிகமாகின்றன.
பிற அறிகுறிகள்
• கால் விரல்கள் தசைகள் வலுவிழுப்பதால் மடங்கிக் கொள்ளுதல் பாதங்கள்  வளைவாக இல்லாமல் தட்டையாக ஆவது
• எடை அதிகரிப்பதால் தசைகள் வெடித்து புண் ஏற்படுவது
• நரம்பு மண்டலம் பாதிப்படைந்து விந்து விரைந்து வெளிப்படுவது
• நரம்பு பாதிப்படைவதால் ஆண்கள் விறைப்புத்தன்மையை அடைய முடியாமல் போவது
• தோள் பட்டை இறுகி வலியை தருவது செயல்பாட்டை இழப்பது
• கை விரல்கள் கால் விரல்கள் சூகை பிடித்தல் இவை தவிர இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது.
இவற்றிற்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிறந்த மருந்துகள் உள்ளன.
அவை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் இத்தகைய நரம்பு மண்டல பாதிப்புகளின் தாக்கத்தை குறைத்து அதிக நாட்கள் அவை தாக்காமல் உடலுக்கு தேவையான சக்தியை அளித்து பாதுகாக்கின்றன. இம்மருந்துகளை தொடர்ந்து அலோபதி மருந்துகளுடன் சேர்த்து உபயோகித்து வர சர்க்கரை அளவும் கட்டுப்படும் பிற பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திடும்.
நீரிழிவு பரிசோதனைகள்
நீரிழிவு நோயாளிகள் உடலை பரிசோதனை செய்து கொண்டேயிருத்தல் மிக, மிக அவசியம். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்துகொள்ள இயலும்.
இரத்த நாளங்களுக்கான பரிசோதனை
இரத்த நாளங்கள் பாதிப்படைவதால் தான் ஏராளமான பிரச்சனைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுகின்றது.
எனவே, இரத்த நாளங்களுக்கான பரிசோதனை மூலம் இரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது. என்பதனை அறிந்து கொள்வது அவசியம், இதனை டாப்லர் பரிசோதனை மூலம் அறிந்திட முடியும்.
நரம்புகளுக்கான பரிசோதனை
நரம்புகளில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? பரிசோதித்துத் தெரிந்து கொள்ளலாம். தொடு உணர்வு, சூடு குளிர் போன்ற உணர்வுகள் உடலின் அனைத்து உறுப்புகளிலும் எவ்வாறு உள்ளது என்பதனை அறிய முடியும்.
இப்பரிசோதனையை நரம்புகள் பாதிப்படைந்தவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் பாதிப்படையாதவர்கள் வருடம் ஒரு முறை செய்து கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment