தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

நீரிழிவு பரிசோதனைகள்


நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் வருடத்திற்கு ஒரு தடவை ரத்தப் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்கள் பரம்பரையில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர் எவேரனும் இருந்தால், நீங்கள் 30 வயதிலிருந்தே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
நார்மல் சர்க்கரை அளவுகள்
• ஃபாஸ்டிங்க் பிளாஸ்மா 60 முதல் 110 மி.கி. இந்த டெஸ்ட் வெறும் வயிற்றில், சாப்பிடும் முன் எடுக்கப்படும்.  இதற்கு மேலாக இருந்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது என்று அர்த்தம்.
• சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு 140 லிருந்து 160 வரை இருக்கலாம். இது போஸ்ட் பிராண்டியல் அளவு.
• திட்டமில்லாமல், தோன்றிய போது செய்யும் பரிசோதனையில் சர்க்கரை 200 மி.கி. அளவை தாண்டக் கூடாது.
இந்த பரிசோதனைகளை மற்றொரு நாளிலும் எடுத்துப் பார்க்க வேண்டும். இரண்டு தடவைகளிலும் 126 மி.கி.க்கு மேல் இருந்தால் சர்க்கரை வியாதி. பொதுவாக சிறுநீரில் சர்க்கரை வருவதில்லை. ஆனால் சர்க்கரையின் அளவு 180 மில்லி கிராமை தாண்டினால் அது சிறுநீரில் கலந்து விடும். இந்த 180 மி.கி. அளவை, டாக்டர்கள், ரீனல் த்ரஷ்ஹோல்ட் என்று குறிப்பிடுகின்றனர்.
குளுகோஸ் சகிப்பு சோதனை
நீரிழிவு வியாதி இருப்பதையும், சர்க்கரை அளவுகளை துல்லியமாக காட்டி விடும் பரிசோதனை இது. முதலில் வெறும் வயிற்றில் ஒருமுறை ரத்தம் எடுத்து குளுகோஸின் அளவு பரிசோதிக்கப்படும். பிறகு 50/75/100 குளுகோஸ் சர்க்கரையை தண்ணீரில் கலந்து அதை நோயாளிகளை குடிக்கச் செய்வார்கள் பிறகு 1/2 மணி நேரம், ஒரு மணிநேரம், ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம், கழித்து ஒவ்வொரு அரை மணி அளவில் ரத்தத்தை எடுத்து சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும்.
இந்த மாதிரி ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போது சிறிது சிறுநீரையும் பிடித்து, அதன் சர்க்கரை அளவு கணிக்கப்படும். இந்த சோதனையால் நீரிழிவின் கட்டங்களை சரியாக கணிக்க முடியும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட ரத்த சிவப்பணு பரிசோதனை
இது ஒரு நவீன முறை சோதனை ரத்தத்தின் சிவப்பு அணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் (இரும்பு புரதம்) சர்க்கரையுடன் கலந்து நிரந்தர மாற்ற – மடைகிறது. இந்த சர்க்கரை செறிந்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 90 நாட்கள். இவை 90 நாட்கள் சர்க்கரையால் பீடிக்கப்பட்டு அந்த நிலை மாறாமல் இருக்கும். இதை வைத்து ஒருவருக்கு சர்க்கரை வியாதி உண்டா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள்
கர்ப்பிணி பெண்களில் 3 சதவிகித பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் கர்ப்பமான 6 வது வாரத்தில் உருவாகலாம் குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை நோய் மறைந்து விடும். ஆனால் இது தற்காலிக பாதிப்பாக இருந்தாலும், உரிய சிகிச்சை பெறாவிட்டால் குறை பிரசவம், குழந்தையின் உயிருக்கு ஆபத்து, தாய்க்கு ஆபத்து இவை நேரிடும். கர்ப்பமான 4ம் மாதம், பிறகு 6 மற்றும் 8 மாதங்களில் ரத்த பரிசோதனை செய்து கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும். இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும், குழந்தையை பாதிக்காது.
நீரிழிவு பரிசோதனைகள்
நீரிழிவு நோயாளிகள் உடலை பரிசோதனை செய்து கொண்டேயிருத்தல் மிக, மிக அவசியம். அப்பொழுது தான் உடல் ஆரோக்கியம் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்து கொள்ள இயலும்.
அமெரிக்க மருத்துவ பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில், ரத்தத்தின் சர்க்கரை அளவு 80 லிருந்து 89 மி.கி / டெ.லி இருக்க வேண்டும் என்கிறது. சாதாரணமாக 90 லிருந்து 100 அளவுகளை “நீரிழிவு” இல்லை என்ற தற்போதயை மருத்துவ கருத்து சரியில்லை என்கிறது இந்தக் கட்டுரை. 90 லிருந்து 100 அளவு இருந்தால் உங்கள் உடல் இன்சுலீனை “எதிர்க்க” ஆரம்பிக்கிறது என்று பொருள். 95 லிருந்து 99 அளவு சர்க்கரை இருந்தால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக மாறும் சாத்திய கூறுகள் அதிகம். ஏன், 85 அளவுக்கு மேலே ஏறும் ஒவ்வொரு மி.கிராமுக்கும், நீங்கள் சர்க்கரை நோயாளியாக மாறும் நிலை 6% அதிகமாகிறது.

No comments:

Post a Comment