தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Showing posts with label செக்ஸ் மருத்துவம். Show all posts
Showing posts with label செக்ஸ் மருத்துவம். Show all posts

Wednesday, August 24, 2011

ஆண்மை வலுப்பெற


பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வளங்கிடும்.
அஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.
நியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

Wednesday, August 17, 2011

மலரினும் மெல்லியது காமம்





கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,





"செக்ஸ் என்பது தனி நபரின் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினையும் கூட" என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது நூலொன்றில் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. வகுப்பறைக்குள் மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும், காவல் நிலையத்திலே கணவர் முன்பே பெண்ணை சிதைத்த போலீஸ் மிருகங்களைப் பற்றியும், தெய்வீகம், தியானம் என்ற போர்வையில் காமக்களியாட்டங்களும், கொலைகளும் நடத்திய ஹைடெக் சாமியார்கள் பற்றியும், தேவாலய வளாகத்திலேயே பெண்களை சூறையாடும் பாதிரியார்களைப் பற்றியும், சாலையில் சென்ற இளம் பெண்ணை வம்பு செய்து ஆடையைப் பிடித்து இழுத்து அலைக்கழித்து உயிரையே பறித்த, இளைஞர்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்கள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் பரவி வருகின்றன.


பாலியல் பிழைகளின் பின்புலமாய் தகவல் தொடர்பு சாதனங்கள்: 

மனித உரிமைகளுக்காக, சமூக நியாயங்களுக்காக, மனித மேன்மை-களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பாலியல் வேட்கையை கிளறி விடுகின்றன. வக்கிர உணர்வுகளுக்கான விதைகளைத் தூவுகின்றன. வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன. இவைகளால் உந்தித் தள்ளப்படும் குழந்தைகளும், மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தவறான (பாலியல்) பாதைகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தகவல் தொடர்புச் சாதனங்கள் பாலியல் தொடர்பான வியங்களை மதவாத கருத்துக்களுக்கு உரமூட்டும் வகையிலும், விஞ்ஞானத்துக்கு புறம்பான வகையிலும் பரப்புகின்றன. மறுபக்கம் மேலைநாட்டு கலாச்சாரமும் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலை- நாடுகளில் சாதாரணமானவர்களிலிருந்து ஜனாதிபதி வரை பாலியல் குற்றங்களில் கற்பு பற்றியும் உரக்க கூச்சலிடும் இங்கே மேலைநாட்டு (அ) நாகரீகங்களின் நச்சு நிழல் படிவதால் பாலியல் தவறுகள் பெருக்கெடுக்கின்றன. மனித உறவுகளில் மாசு படிகிறது. சமூக மாண்புகள் அழிகின்றன.


செக்ஸ் புதிரா? புனிதமா? 

செக்ஸ் என்பது புதிரானதா? செக்ஸ் என்பது புனிதமானதா? செக்ஸ் என்பது விற்பனைச் சரக்கா? செக்ஸ் என்பது பாவச் செயலா? என்ற வினாக்கள் எழுந்துள்ள காலம் இது. செக்ஸ் குறித்து கடந்த காலச் சிந்தனைகளுக்குள்ளே சமுதாயம் மூழ்கி கிடப்பதால் பாலியல் ஞானம் பெறத் திறந்த, விரிவான விவாதம் இன்னும் அமையவில்லை. பெண்ணைப் பற்றிய கருத்துக்களின் அளவுதான் பாலியல் ஞானத்தின் அளவாகவும் உள்ளது. 
பெண் போகப் பொருளாக, பிள்ளை பெறும் எந்திரமாக மட்டுமே கருதப்படுவதால், சமூகத்தின் பாலியல் அறிவு பலவீனமாகவே உள்ளது. பெண் புரியாத புதிர் என்றும், பெண் புனிதமானவள் என்றும் பேசப்படுவதால் செக்ஸ் புதிராகவோ, புனிதமாகவோ கருதப்படுகிற அவலம் உள்ளது.

பசியைப் போல, தாகத்தைப் போல, சுவாசத்தைப் போல இயற்கையான ஒன்றாய் யதார்த்தமான ஒன்றாய், உடலியக்கச் செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கக்கூடிய செக்ஸ் 'புதிர்' என்றும் 'புனிதம்' என்றும் பேசப்படுகிறது.

அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் வயாக்ரா: 

மேலை நாடுகளின் பாலியல் பாதை விபரீத விளைவுகளை ஏற்படுத்தம் என்பதற்கு "வயாக்ரா" சரியான சான்றாகும். பாலுணர்வு கலந்த அன்பின் வெளிப்பாடான காமத்தை,மலரினும் மெல்லிய காமத்தை, மிருக வெறியாக மாற்றும் மாத்திரைதான் வயாக்ரா. 

வயாக்ரா என்பது உடலுறவுக்குப் பின்னரும், விரைப்புத் தன்மையை நீடிக்கச் செய்து துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இரத்த அழுத்தத்தைத் குறைக்கின்றது. புராஸ்டேட் சுரப்பி வீங்குகிறது. புராஸ்டேட் சுரப்பியிலும் முதுகுத்தண்டிலும் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. சிறுநீரகம் செயலிழக்கின்றது. ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. விழிகளின் மிக மெல்லிய இரத்த நாளங்களை விரிவடையச் செய்து பார்வையை பறிக்கிறது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கண்மூடித்தனமான கலாச்சாரத்தை பெருமை பாராட்டுகின்றனர்.

ஹோமியோபதி மனிதனை மனிதனாக நோக்குகிறது. அவனது உடல், மன இயக்கச் சீர்குலைவைச் சரிசெய்து நலத்தை மீட்கிறது. ஆற்றல் ஊட்டுகிறது. பல்வேறு அக, புற நோய்களுக்கும் ஆட்பட்ட மனிதனுக்கு ஹோமியோபதியால் பேருதவி புரிய முடிகிறது. வயிற்றுப்பசி மற்றும் ஜீரணத்தை மையப்படுத்தி (பசியின்மை, அகோரப்பசி, பசித்தும் சாப்பிட இயலாமை, சாப்பிட்டால் வாந்தி, சாப்பிட்டவுடன் வயிற்று வலி என்ற) விதவிதமான நோய்குறிகள் கிளைப்பதைப் போலவே பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குறிகள் வெளிப்படுகின்றன.


அவற்றுக்கான முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் பின்வருமாறு 

1. அக்னஸ் காஸ்டஸ்:

அதிக உடலுறவு அல்லது சுய இன்ப பெண்கள் சக்தியிழப்பு (குறிப்பாக ஆண்கள்).


2. ஓனோஸ் மோடியம்: 

உடலுறவில் வெறுப்பு, இச்சையின்மை (குறிப்பாக பெண்கள்)

3. செலினியம்:

விருப்பம் அதிகம், செயல்திறன் குறைவு, விந்து நீர்த்திருத்தல், விரைவில் விந்து வெளிப்பாடு.

4. கோனியம்: 

பெண் எதிரே நின்றாலே காமவேட்கை, குறி எழுச்சி, விந்து வெளிப்படுதல் மற்றும் காம இச்சையை அடக்கியதால் ஏற்பட்ட பின்விளைவுகள்.

5. புபோ / யுஸ்டிலகோ: 

சுய இன்ப தாகம் அடக்க முடியாமல் தனியே சென்று விட விரும்புதல், தனியறையில் (கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில்) சுய இன்பத்தில்

6. லைகோபோடியம்: 

ஆண்மைக்குறைவு, சிறு வயதிலேயே சுய இன்பப் பழக்கத்தால் ஆண்குறி சிறுத்தல், தளர்தல், வயதானவர்களின் ஆண்மைக்குறைவு.

7. ஸ்டாபிசாக்ரியா: 

அளவு மீறிய சுய இன்பத்தால், பாலுறவால் ஆண்மையின்மை.

8. பாஸ் ஆசிட்: 

மிதமிஞ்சிய உடலுறவால், சுய இன்பப் பழக்கத்தால் பலவீனம், கடுமையான நரம்புத்தளர்ச்சி.

9. காந்தாரிஸ்/ பிக்ரிட் ஆசிட்: 

அதிகமான காம உணர்ச்சியுடன், வலியுடன் உறுப்பு பயங்கரமாக விறைப்படைதல்.

10. டயாஸ்கோரியா: 

பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவில் விந்து வெளியேறுதல், காலையில் உடல் முழுவதும் வலி.

11. ஆசிட் புளோர்: 

ஒரே பெண்ணிடம் திருப்தியடையாமல் பல பெண்களை விரும்பும் அதிக காமம்.

12. கலாடியம்: 

உடலுறவில் ஆர்வம் அதிகம், குறி விரைப்பின்மை, விந்து வெளிவராமை.

13. நேட்ரம் மூர்: 

தனக்கு மணமாகியிருந்தும் வேறு ஆண் அல்லது பெண்ணை விரும்புதல்.

14. ஓரிகானம் / கிரரியோலா / மூரக்ஸ்: 

பெண்களின் பிறப்புறுப்பில் வேதனையான, உணர்ச்சியுடன் கூடிய சுய இன்பம் செய்ய தீராத ஆவல்.

15. இக்னியா: 

காதல் தோல்வி, உணர்ச்சிகளை மனத்தினுள் புதைத்துக் கொள்ளுதல்.

இன்னும் இவை போல ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இவை மனிதனைச் சமநிலைக்கு ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருகின்றன. செக்ஸ் என்ற ஆற்றல் மிக்க உடலியல் மற்றும் உளவியல் திறனைச் செம்மைப்படுத்துகின்றன.

மனிதன் இயற்கையின் சீமந்த புத்திரன். இயற்கையன்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த செல்லப்பிள்ளை. மனிதனுக்குள் ஆரோக்கியத்தை, ஆற்றல்களை இயற்கை புதைத்து வைத்திருக்கிறது. அவற்றை மிக நேர்த்தியாகப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஹோமியோபதி பெருந்துணை புரிகிறது.

(குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை அனுபவமும், தகுதியும் உள்ள ஹோமியோ மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரையின் அடிப்படையில்தான் உட்கொள்ள வேண்டாம்.