டயாபடீஸை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. டயாபடீஸ் வந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. அதே சமயம் பல சிக்கல்களுக்கு டயாபடீஸ் காரணம் என்பதை தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
டயாபடீஸ் உண்டாக்கும் சிக்கல்களை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.
1. தாழ் நிலை சர்க்கரை
2.கேடோ அசிடோஸிஸ்
3. கண்கள் பாதிப்பு
4. சிறுநீரக பாதிப்பு
5. நரம்புகள் பாதிப்பு
6. இதயம் மற்றும் ரத்த நாள பாதிப்புகள்
7. கால் பாதிப்புகள்
8. சர்ம நோய் பாதிப்பு இதர தொற்று நோய்கள்
9. பாலியல் கோளாறுகள்
10. வயிற்றுக் கோளாறுகள்
11. மூட்டுவலி
12. மனச்சோர்வு
அமெரிக்க டாக்டர் ஃபிரடெரி அல்லன் சொல்வது. டயாபடீஸ் ஒரு குறைபாடுள்ள வளர்சிதை மாற்றம் மட்டுமல்ல; உடலின் உள் இருக்கும் வியாதிகள், கோளாறுகள் இவற்றின் மொத்த பிரதிபலிப்பு. டயாபடீஸ் உடலின் உள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கும்.
இந்த பாதிப்புகள் டயாபடீஸ் வந்த சில மாதங்களில் கூட ஏற்படலாம் இல்லை சில வருடங்களிலும் உண்டாகலாம். பல சிக்கல்கள் மெதுவாக முன்னேறுபவை. ரத்த சர்க்கரை அளவை மருத்துவம் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்து கொண்டே வந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 1,00,000 என்று கருதப்படுகிறது.
நீரிழிவு நோயால் வரும் அபாயங்கள்
1. இறப்பு விகிதம் 2 – 3 மடங்கு அதிகரிக்கும்
2. இதய நோய், மூளைத்தாக்குதல் – 2-3 மடங்கு அதிகரிக்கும்
3. கண்பார்வை இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 10 மடங்கு அதிகம்.
4. கால்கள் பாதிப்பு மற்றும் இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 20 மடங்கு அதிகம்.
No comments:
Post a Comment