தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Showing posts with label சோரியாசிஸ். Show all posts
Showing posts with label சோரியாசிஸ். Show all posts

Wednesday, August 24, 2011

சோரியாசிஸ்


சோரியாசிஸ் என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது. சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
சோரியாசிஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் தொழு நோயினர் என்றே கருதி வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 – ல் ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம் இது தொழு நோயிலிருந்து மாறுபட்ட ஒரு சரும நோய் என நிரூபித்துக் காட்டினார்.
Post image for சோரியாஸிஸ்
ஏறக்குறைய உலக மக்கட் தொகையில் ஓரு சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சோரியாசிஸ்
நோயாளிகள் உள்ளனர். தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும். பல நேரங்களில் இது பொடுகு, படை, எக்ஸிமா என்று தவறாகக் கூறி மருத்துவம் செய்யப்படுவதுமுண்டு.
நிரந்தரமாகக் குணமாகாத இந்நோய் மறைவதும் பின்னர் தோன்றுவதும் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்று. டாக்டர் மாற்றி டாக்டர், மருந்து மாற்றி மருந்து என்று இவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. நெடு நாட்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இது எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளினாலும் இது தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மன இறுக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் போதும், சிலவகை மருந்துகள் உட்கொள்ளும் போதும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாற்று முறை மருத்துவர்கள் இதை வேரோடு அறிந்து விட முடியும் என்று கூறினாலும் அது போன்றதொரு மருந்து இது வரை வந்ததாகத் தெரியவில்லை. இதை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது போனாலும் சில வகை ஆங்கில மருந்துகள் இந்நோயின் தாக்கத்தையும் அது தரும் தொல்லையையும் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன.
சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும். தயிரையும் தவிர்க்கவும்.
கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்.
வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும். குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.
கீழ்க்கண்டவற்றை களிம்பாக செய்து பாதிக்கப்பட்ட மேனியில் தடவலாம் – பாதாம், மல்லிகை.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011