நீரிழிவினால் ஏற்படும் பல நோய்கள் போதாதென்று, இப்பொழுது இந்த லிஸ்ட்டில் மூட்டு வலியும் சேர்ந்து விட்டது. நீரிழிவு நோயாளிகளில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. காரணங்கள் சரிவர தெரியாவிட்டாலும், இரண்டு வியாதிகளுக்கும் பொதுவான உடல் எடை அதிகரிப்பு காரணமாகலாம்.
அதிக உடலுழைப்பு இல்லாதவர்கள் அதிகமாக இரண்டு வியாதிகளாலும் தாக்கப்படுகிறார்கள்.
நீரிழிவு சிகிச்சையில் ஒரு முக்கிய அம்சம் – உடலுழைப்பு, உடற்பயிற்சி, எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபடுவதும் ஆகும். இந்த உடலை சுறு சுறுப்பாக வைத்திருப்பது, ஆர்த்தரைடிஸால் கடினமாகும். ஆனால் மருத்துவர்கள் உடற்பயிற்சி, நடப்பது, நீச்சல் போன்றவற்றை, மூட்டுவலி, நீரிழிவு இரண்டும் சேர்ந்த நோயாளிகள் கைவிடக் கூடாது என்கின்றனர்.
மூட்டுவலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்தால் வலி அதிகமாகும் என்று கருதுபவர்கள். ஆனால் மருத்துவர்கள் வலி தொடக்க நிலையில் ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும், உடற்பயிற்சியைக் கைவிடக் கூடாது என்கின்றனர்.
வாரத்திற்கு மூன்று நாட்களாவது “நடைப்பயிற்சியில்” ஈடுபட வேண்டும். 10 நிமிடங்கள் என்று ஆரம்பித்து, 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். உடல் எடை குறைந்தால் மூட்டுவலியும் குறையும்.
No comments:
Post a Comment