தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

அடக்க கூடாதவை

அடக்க கூடாதவை
உடலின் இயற்கை உந்துதல்களை ஆயுர்வேதம் “வேகம்” என்கிறது. இந்த இயற்கை உந்துதல்கள் அல்லது உணர்வுகள் உடல் சம்மந்தமாக இருக்கலாம் இல்லை மனது சம்மந்தமாகவும் இருக்கலாம். ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியம் மற்றும் வியாதிகளுக்கு, இயற்கை உணர்வுகளை அடக்குவது ஒரு காரணம் என்று கருதுகிறது. இயற்கை உணர்வுகளை அடக்கி, தடை செய்தால் வாத தோஷம் அதிகரித்து வியாதிகள் உண்டாகும்
.

ஆசார்ய சரகர் 14 இயற்கை உணர்வுகளை விவரிக்கிறார். இந்த உணர்வுகள் இரண்டு வகையாக சொல்லப்படுகின்றன. ஒன்று “தாரணீய வேகம்”. மற்றொன்று “அதாரணீய வேகம்”.
தாரணீய வேகங்கள் கட்டுப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகங்களை தடுக்கக் கூடாத உணர்வுகள்.
கட்டுப்படுத்த வேண்டிய தாரணீய வேகங்கள்
எண்ணங்கள், பேச்சு, செயல்பாடு அதாவது தீய எண்ணங்கள், கடினமான பேச்சு, தவறான செயல்பாடுகள் இவையாகும். பொறாமை, பேராசை, பொய் சொல்வது, வன்முறை. தாரணீய வேகங்கள் மனது சம்மந்தப்பட்டவை.
அதாரணீய வேகங்கள்
சிறுநீர், மலம், சுக்லம், அபானவாயு, வாந்தி, தும்மல், ஏப்பம், கொட்டாவி, தாகம், பசி, கண்ணீர், தூக்கம், சுவாசம் (மூச்சுவிடுதல்) போன்றவைகள். இவற்றை அடக்கக் கூடாது.
உடல் உந்துதல்கள்
சிறுநீர் கழித்தல் – மூத்திரவேகம்
இந்த தேவையை அடக்கினால் மூத்திரப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் வலி ஏற்படலாம். பிறகு சிறுநீர் கழிக்கையில் வலி உண்டாகலாம். சிறுநீரகத்தில் “கற்கள்” உண்டாகும். தலைவலியும் ஏற்படும். இந்த கோளாறுகளுக்கான சிகிச்சை, மசாஜ், தொட்டியில் சுடுநீரில் அமிழ்ந்து இருத்தல். பாதிக்கப்பட்டிருப்பது அபான வாத தோஷம்.
மலவேகம்
இதை அடக்குவதால் பல சிக்கல்கள் உருவாகும். வயிற்றுவலி, தசை இழுப்பு, வாதம், விக்கல், தலைவலி, மலச்சிக்கல், ஜலதோஷம், ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி இவைகள் ஏற்படும். முக்கியமாக மலச்சிக்கல் உண்டாகும். இந்த கோளாறுக்களான சிகிச்சை, ஒத்தடம் கொடுத்தல், தவிர மூத்திர வேகத்தில் குறிப்பிட்டவை. மேற்குறிப்பிட்ட இரண்டு வேகங்களுக்கு தடை செய்யாமல் எளிதாக கழிக்க வேண்டும். சிறுநீர் சீராக கழிப்பதற்கு, இடதுகையால் வலது பக்க அடிவயிற்றை பிடித்து அழுத்தலாம். மலம் கழிக்கையில், வலக்கையால் இடது பக்க வயிற்றை பிடித்து நிறுத்தலாம். காலை எழுந்தவுடன் மலஜலம் கழிப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இந்த காலைக்கடன் முடியும் வரை ஒன்றும் உட்கொள்ள வேண்டாம். மலபந்தம் உள்ளவர்கள் மலஜலம் கழிக்கும் முன் வெந்நீர் குடிப்பது நல்லது. “வீட்டுக்காப்பியே வெந்நீர் தான் அதை குடித்தாலே போதும்” என்பார்கள் உங்களில் பலர்! காப்பி சாப்பிடாவிட்டால் மலஜலம் கழிப்பது கடினம் என்பவர்கள் முடிந்த வரை காப்பியை துறந்து, வெந்நீரை குடித்து பழக்கத்தை மாற்ற முயலவும். இயற்கையாக மலம் போதல் உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு அறிகுறி. மலஜலம் போனதும் கை, கால்களை நன்கு கழுவி, வாய் கொப்பளிக்கவும். வாய் கொப்பளிப்பதை ஆயுர்வேதத்தில் கண்டூஷம் என்பார்கள். இதனால் வாய் வறட்சி, நாற்றம் போகும்.
சுக்ல வேகம்
சிலர் கருத்தடைக்காக, உடலுறவின் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டு சுக்லம் வெளியேறுவதை தடை செய்கின்றனர். இதனால் ஜனனேந்திரியங்களில் வலி, ஜுரமில்லாமலே ஜுரம் போன்ற உணர்வு, காங்கை, படபடப்பு, இடுப்பு வலி, நெஞ்சுவலி, ஏற்படும். மசாஜ், எனிமா, நல்ல குளிர்ந்த ஜலத்தில் அமிழ்ந்து குளித்தல், அதிக பால் குடிப்பது, பாலில் பாதாம் பருப்பு, கசகசா, பூசணி, வெள்ளரி விதைகள் இவற்றை (ஏதாவது ஒன்றை) அரைத்து குடித்து வர சுக்லவேகத்தை தடுப்பதால் ஏற்படும் கெடுதல்களுக்கு இவை நிவாரணம் அளிக்கும்.
அபான வாயு வேகம்
கீழ்வாயு தடைப்பட்டால், வயிற்றுவலி, உப்புசம் மலச்சிக்கல், பசிமந்தம், களைப்பு ஏற்படும். வாயுவை வெளியேற்றும் மருந்துகள், எனிமா இவை பலனளிக்கும்.
வாந்தி வேகம்
வாந்தி இயற்கையாக ஏற்படலாம். செயற்கையாக உண்டாக்கப்படலாம். இயற்கையாக வரும் வாந்தியை தடை செய்யக் கூடாது. இதை அடக்க முயன்றால், பித்தம் உடல் முழுவதும் பரவி விடும். தோலில் அக்கி, எரிச்சல், சோகை, ஜுரம், குமட்டல், இருமல், பெருமூச்சு போன்றவை ஏற்படும். நடப்பது போன்ற தேகப்பயிற்சிகள், பட்டினி இருத்தல், பேதி மருந்துகள் – இவை நிவாரணமளிக்கும்.
தும்மல் வேகம்
தும்மலை அடக்குவது கடினம். ஆனால் இதை அபசகுணமாக கருதி, பலர் அடக்க முயலுவார்கள். இதனால் தும்மல் மேலும் இருமடங்கு வேகத்துடன் வெளியாகும். தடைப்பட்டால் தலைவலி, கழுத்துப் பிடிப்பு, கண்வலி, முக பக்கவாதம் முதலியவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு மசாஜ், கழுத்து, தலை இவற்றுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். நாராயண தைலம் போன்ற வாதத்தை போக்கும் தைலங்களை தடவி ஒத்தடம் கொடுக்கலாம். மூக்கினில் விடும் மருந்துகளை (நாசியம்) பயன்படுத்தலாம்.
ஏப்ப வேகம்
இரைப்பையிலிருந்து அழுத்தத்துடன் காற்று மேல் வழியாக “ஏப்பமாக” வெளியேறுகிறது. ஏப்பம் பசியுள்ள போதும், உணவு உண்டபின்னும் ஏற்படும். இரைப்பையில் இடைவெளியை ஏற்படுத்த ஏப்பம் உண்டாகிறது. பசியுடன் உள்ள போது ஏப்பம் சூடாக, எரிச்சலுடன் வெளியேறும். உணவு உண்டவுடன் வரும் ஏப்பம், உண்ட உணவிலுள்ள பதார்த்தங்களின் வாசனையுடன் வெளிவரும். ஜீரணித்த பின் ஏற்படும் ஏப்பம் சுத்தமாக மணமின்றி இருக்கும். ஏப்பம் விடுவது அநாகரிகம் என்று நாம் இதை அடக்க முயலுவது உண்டு. அதனால் விக்கல், இருமல், வயிற்று உப்புசம், மார்பில் உதறல் இவை ஏற்படலாம். மார்பில் தைலங்கள் தடவி ஒத்தடம் கொடுப்பது அஷ்டசூரணம், பாஸ்கரலவணம் இவற்றை வெந்நீருடன் கொடுப்பது – இவற்றால் ஏப்பத்தை அடக்குவதால் ஏற்படும் கோளாறுகளை சமாளிக்கலாம்.
கொட்டாவி வேகம்
தூக்கம் வருவதின் அறிகுறி கொட்டாவி. தூக்க உணர்வு அதிகரிக்கும் போது அடுக்கடுக்காய் கொட்டாவி வரும். இதை தடுக்க முன்பட்டால், கை கால் நடுக்கம், மரத்துப்போதல், உடல் தளர்வு, மூச்சுத்திணறல், கண் வலி, தலைவலி, கழுத்தில் பிடிப்பு இவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகள் உதவும்.
தாக வேகம்
சாப்பிடும் போது அல்லது சாப்பிட்டு முடிந்தவுடன் குடிக்க நீர் வேட்கை ஏற்படும். நீர் பருகாமல் இருந்தால் தொண்டை, வாய் உலர்ந்து போதல், உடல் வறட்சி, காதுக் கேளாமை, தலைசுற்றுதல், அதிக இதயத்துடிப்பு, உடல் களைப்பு இவை தோன்றும். குளிர்ந்த புத்துணர்ச்சியூட்டும் பானங்களை குடிக்க, இந்த கோளாறுகள் குறையும்.
பசி வேகம்
பல காரணங்களால் நாம் பசியை அடக்கிக் கொள்கிறோம். இதனால் களைப்பு, மயக்கம், உடல்வலி, தலைச்சுற்றல் ஏற்படலாம். இதைப் போக்க உடனடியாக அதிகமாக உணவை உட்கொள்ளலாமல், சூடான ருசியான உணவை அளவோடு உண்ணவும். சில சமயங்களில் மற்றவர்கள் உண்ணுவதை நேரிலே அல்லது டி.வி.யில் பார்க்கும் போது நமக்கும் ‘பசி’ எடுக்கும். இது இயல்பான பசி அல்ல.
கண்ணீர் வேகம்
-உணர்ச்சி வசப்படும் போது கண்ணீர் வரும். சாதாரணமாக கண்ணீர் கண்களுக்கு நல்லது. கண்ணீரை அடக்கினால், அதன் வேகம் “சைனஸ்” பாதிப்புகளை உண்டாக்கலாம். இதயநோய், கண்நோய்கள், கலக்கம், தலைசுற்றல் ஏற்படலாம். தூக்கம், அன்பான அரவணைக்கும் பேச்சு, மதுபானம் இவை கண்ணீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.
தூக்க வேகம்
உழைப்பிற்கு பின் உடலும், உள்ளமும் தளர்ந்து விடுகின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுக்க தூக்கம் அவசியம். தூங்குவதற்கென்றே இரவு இருட்டாக அமைந்திருக்கிறது. தமோகுணம் நிறைந்த இருட்டு வேளையில் அந்த குணத்தை குறைக்க செய்வது தூக்கம். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, மந்தம், கண்பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றுக்கு மருந்து தூக்கமே ஆகும். மசாஜ்ஜும் உடல் களைப்பை நீக்கி நித்திரை வரச் செய்யும்.
பெருமூச்சு வேகம்
வெகு தூரம் நடக்கும் போதும், உடற்பயிற்சி இவற்றாலும் உடல் களைத்து, அதை சரி செய்ய பெருமூச்சு விட நேரும். இதை தடை செய்தால் மூச்சை, இதயநோய், வயிற்றுவலி, கலக்கம் இவை ஏற்படலாம். ஓய்வு எடுத்துக் கொண்டால் மூச்சு விடுதல் சீராகும். வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத சிகிச்சைகளும் பலன் தரும்.
இருமல் வேகம்
இருமல் என்பது உடலினால் மேற்கொள்ளப்படும் ஒரு தற்காப்பு முன்னெச்சரிக்கை செயல். மூச்சுக்குழாய்களில் சுத்தம் செய்வது இருமல். வேறு வியாதிகளின் முதல் அறிகுறி இருமலாகும். எனவே இருமலை அடக்க முயன்றால், மூச்சுத்திணறல் விக்கல், உடல் உலர்ந்து போதல், மார்பில் வலி இவைகள் ஏற்படும். இருமலை போக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை அடக்கக் கூடாதவைகளை பார்த்தோம். இப்போது அடக்க வேண்டிய “தாரணீய வேகங்களை” பார்ப்போம். மனவேகங்களும், உடல் வேகங்களில் எதிர்மறையானவை. உடல் வேகங்களை விட, மனவேகங்கள் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். ஆயுர்வேதம் பல மனவேகங்களை விவரிக்கிறது. யோசனையற்ற அவசரம், கொடுமையான வன்முறை, ஒழுக்கமில்லா செயல்கள், பேராசை, தூக்கம், பயம், கோபம், அகங்காரம், வெறுப்பு, மானமின்மை, கொடூரகுணம், பொறாமை – இவையெல்லாம் மனஉந்துதல்கள். இவற்றை அடக்க வேண்டும். சட்டியில் இருப்பது ஆப்பையில் வரும் என்பார்கள்.  அதே போல உள்ளத்தில் எழும் எண்ணங்கள் கெடுதலாக இருந்தால் பேச்சும், செயல்பாடுகளும் கெட்டதாக வெளிப்படும். எனவே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லோர்களுடன் பழக வேண்டும். உடலையும், மனதையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வை அடைகின்றனர்.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011


No comments:

Post a Comment