தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

நீரிழிவின் அறிகுறிகள்


திரிசூலத்தை போல் டயாபடிஸீக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் உண்டு. அவை அடிக்கடி அதிக சிறுநீர் கழித்தல், அடங்கா தாகம் மற்றும் அகோரப் பசி.
1. சிறுநீர் பெருக்கு: சாதாரணமாக சிறுநீர் 1 – 1.25 லிட்டர்  போகும். நீரிழிவு
நோயாளிகள் 3 – 10 லிட்டர் சிறுநீரை கழிப்பார்கள். ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் குளுக்கோஸ் இருக்கக் கூடாது. சிறுநீரகம் வடிகட்டிகளால் க்ளுகோஸை எடுத்து விடும். ரத்தத்தில் குளுகோஸ் ஏற, ஏற சிறுநீரக வடிகட்டிகள் சமாளிக்க முடியாமல் திணரும். ரத்த சர்க்கரையின் அளவு 160 – 180 மி.கி / டெ.லி. தாண்டினால் பளுவை தாங்கமுடியாமல், சிறுநீரகம் சரியாக வடிகட்டாமல் சர்க்கரையை சிறுநீரில் சேர்த்து விடும்.  இந்த சிறுநீர் கரைசலின் அளவை குறைக்க செய்ய மேலும் மேலும் சிறுநீரகம் தண்ணீரை அனுப்பும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
சிறுநீர் வழியே சர்க்கரை வெளியே செல்வதால் தன்னுடன் நிறைய தண்ணீரையை சேர்த்துக் கொண்டு செல்கிறது. கிட்டதட்ட எப்போதும் சிறுநீர் கழிக்கும் உந்துதல் உண்டாகும். உடல் செல்களிலிருந்து ஓஸ்மோசிஸ் முறையில் தண்ணீர் வெளியேறி விடும். செல்கள் வற்றி விடும். உடல் தண்ணீர் சிறுநீரகம் வெளியேற, தண்ணீர் தேவை ஏற்பட்டு, அடங்கா தாகம் உண்டாகும். இந்த தொல்லை ஒரு சுழற்சியாக நடக்கும். குறிப்பாக இரவில் தொண்டை வரண்டு போய் தாகம் ஏற்படும். சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டி வரும். உடலுக்கு அவசியமான சர்க்கரை சத்து டயாபடீஸால் உயிரணுக்களுக்கு, திசுக்களுக்கு சேரமுடியாததால், மூளை இந்த பற்றாக்குறையை தீர்க்க, பசியை தூண்டி விடும். சாப்பிட்டாலும், உணவு கலோரிகள் சிறுநீரில் வெளியேறி விடும். வேண்டுமென்கிற அளவு குளுக்கோஸ் இருந்தாலும், அது உடலில் சேரமுடியாத துர்பாக்கிய நிலையினால், ஒரு பக்கம் சிறுநீர் போக, மறுபக்கம் பசியும் தாகமும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
2. எடை குறைதல், குளுக்கோஸ் இல்லாமல் பட்டினி கிடக்கும் செல்கள் மூளையிடம் முறையிட, அது வயிற்றுக்கு உத்தரவிட்டு பசியை தூண்டுகிறது. அதிகமாக சாப்பிட நேர்ந்து அதனால் சிலருக்கு எடை ஏறலாம். இதற்கு எதிர்மாறாக சிலருக்கு என்ன அதிகமாக சாப்பிட்டாலும் எடை குறையும். இந்த திடீர் எடை குறைவு, டைப் – 1 நோயாளிகளிடம் பரவலாக ஏற்படும்.
3. குறைக்கமுடியாத அளவு, களைப்பு, உடல் சோர்வு இவை இதர அறிகுறிகள்.     பல முறை சொன்னபடி உடலில் சக்திப் பொருளான குளுக்கோஸ் சேரமுடியாததால் உடல் சக்தி பற்றாக்குறையால் உடல் அசதியடையும். எப்போதும் சோர்வாக, தூக்க உணர்வாக பலவீனமாக இருக்கும்.
4. வேலையில் சுணக்கம், சர்க்கரை சக்தி குறைவினால் மூளையின் திறன் குறையும். மறதி ஏற்படும். வேலையில் கவனம் செலுத்தமுடியாது.
5. ஆறாத காயங்கள், புண்கள், தோல் பாதிப்பு, உடல் அரிப்பு அதிக ரத்த சர்க்கரையால் காயங்களை ஆற்றும் திறனை உடல் இழந்து விடுகிறது.   சர்க்கரை ரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது, வெள்ளை ரத்த அணுக்கள், கிருமிகள், நோய் தொற்றுகள் இவற்றுடன் அதிகமாக போராட முடியாது.
உடலின் செல்கள் சர்க்கரை நோயால், மென்மையாக மாறி விடும். நோய் தொற்று அதிகரிக்கும். எனவே காயங்கள் லேசில் ஆறாது. அதுவும் கால்களில் காயங்கள் புண்கள் ஏற்படுவது சகஜம். தோலில் ரத்த ஒட்டம் குறைந்து போவதால், வரட்சியடைந்து, மெல்லியதாகி விடும். டயாபடீஸ் நரம்புகளை வலுவிழக்க செய்வதால் வலியும் தெரியாமல் போகலாம். பிறப்புறுக்களில் அரிப்பு ஏற்படும். சர்க்கரை நிறைந்த ரத்தம் நரம்பு முனைகளை தாக்கி, நலிய வைத்து அரிப்பை ஏற்படுத்தும். கை, கால் தொடை இடுக்கில் படை வரும். புண் ஏற்படும், நமைச்சல் உண்டாகும். குளுகோஸ் நிறைந்த இரத்தத்தில் நோய்க் கிருமிகள் எளிதாக இடம் பிடித்து வளர்கின்றன. இவை புண், காயம் போன்றவைகளை எளிதில் ஆறவிடாமல் செய்வதுடன் கட்டி, கொப்புளம், பிளவை எனப்படும் கார்பங்கிள் போன்ற சரும நோய்களை உண்டு பண்ணுகின்றன.
6. சிறுநீர் பாதை தொற்று: அடிக்கடி சிறுநீர் போக வேண்டியிருப்பதால், சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
7. கண்கோளாறு, தெளிவற்ற பார்வை: கண்களில் உள்ள மெல்லிய சிறு நரம்புகளை, ரத்த சர்க்கரை தாக்கும். சர்க்கரையால் கண் திரவங்களின் அடர்த்தி மாறுபடும். கண் லென்சுகள் அளவுக்கு அதிகமான சர்க்கரை திரவத்தில் அமிழ்வதால் தெளிவான தன்மையை இழந்து மாவு படிந்தாற் போல் ஆகிவிடும்.
8. பாதங்களில் எரிச்சல், உடல்வலி
பாத கட்டை விரலில் திடீரென்று நெருப்பு இட்டாற்போல் எரிச்சல் தோன்றும். கை, கால் பாதங்களில் எரிச்சல் உணர்வு, குத்துவலி இவை தோன்றும்.
9. பற்கள் பறிபோகும்
“ஜிஞ்ஜி வைட்டிஸ்” என்ற பல், ஈறுகளை பாதிக்கும் நோய் வர வாய்ப்புகள் அதிகம். வாயில் புண் ஏற்பட்டால், ஆற நாளாகும். பற்சிதைவு, ஈறுகளில் ரத்தக்கசிவு, சீழ்பிடித்தல், வாயில் துர்நாற்றம் இவை அறிகுறிகள்.
10. உடலுறவில் ஆர்வம் குறைதல்
களைப்பு, சோர்வு, இயலாமை இவற்றை டயாபடீஸ் உண்டாக்குவதால் உடலுறவில் நாட்டம் குறையும்.
இதர அறிகுறிகள்
• தலை சுற்றல், மயக்கம்
• உள்ளங்கை, உள்ளங்கால்களில் எரிச்சல்.
• கை, கால் மரத்துப்போதல்
• வயிற்று வலி, வயிறு உப்புசம்.
• காதில் சீழ்வடிதல்
• நரம்புத்தளர்ச்சி
இவ்வளவு அறிகுறிகள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். சர்க்கரை வியாதியின் தீமையே அதன் ஆரம்பகால அறிகுறிகள் என்ன என்று குறிப்பிட்டு கூற முடியாது. இந்த நோய் உடலின் எல்லா பாகத்தையும் தாக்குவதால், அந்தந்த உறுப்புகளின் கோளாறு தான் புலப்படும். அதனால் வருடத்திற்கு ஒருமுறையாவது ‘சுகர் டெஸ்ட்’ அவசியம்.

No comments:

Post a Comment