தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

டயாபடிக் ரெடினோபதி


டயாபடீஸ் அதிகம் தாக்கும் உடலின் அவயம் கண்கள், கண்களின் எல்லாவித பாகங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் கண்கள் குருடாவதற்கு, 6 வது காரணம் சர்க்கரை வியாதி. இந்த வியாதி உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட கண் பாதிப்பு ஏற்படுவது 25 சதவிகிதம் அதிகம். இவ்வாறு கண்பார்வை பறிபோதல் உங்கள் நீரிழிவு வியாதி எவ்வளவு வயதானது என்பதை பொருத்தது. பொதுவாக கண்பாதிப்பு நீரிழிவு 10 – 15 வருடங்களுக்கு மேலாக உங்களுக்கு இருந்தால், தலையெடுக்கும்.
டயாபடீஸ் கண்களில் இரண்டு வித மாற்றங்களை உண்டாக்குகின்றன.  முற்றும் பரவாத டயாபடிக் ரெடினோபதி மற்றும் பரவிய டயாபடிக் ரெடினோபதி  இந்த இரண்டு மாறுதல்களும் கண்களை பாதிக்கும் அபாயகரமானவை. டயாபடீஸ் நோயாளிகள் இன்சுலின் உபயோகிக்கிறவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண் நோய்கள் இரு டைப் நோயாளிகளையும் பாதிக்கும். கூட உயர் இரத்த அழுத்தமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டாம். இரண்டும் கண்களும் சப்தமின்றி பாதிக்கப்படும். அதிக அளவு சர்க்கரை நிறைந்த ரத்தம், கண் விழித்திரையில் உள்ள சிறிய ரத்தக் குழாய்களை பலவீனப்படுத்தும். சேதமடைந்த இரத்தக் குழாய்கள் ப்ளாஸ்மாவையும் இரத்தத்தையும் விழித்திரையில் கசிய விடுகின்றன.
முற்றிலும் பரவாத ரெடினோபதி
ரெடினாவின் சிறு நாளங்கள் ஓட்டை ஏற்பட்டு இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. இரத்தக் கசிவின் சுற்று வட்டார பிரதேசங்கள் வீங்கி, பார்வையின் பரப்பை குறைக்கின்றன. கண் விழித்திரையின் மத்ய பகுதியில் மேகுலா என்ற நுட்பமான பகுதி உள்ளது. இது தான் நாம் பார்க்கும் காட்சிகளை உணர வைக்கும் (கூம்புகள்) நிறைந்தது. இரத்தக் கசிவு மேகுலாவின் அருகில் ஏற்பட்டால் மத்திய பார்வை மங்கும். முதலில் முழுத்தாக்கம் தெரியாது. மெல்ல மெல்ல பார்வை குறையும். நீல – மஞ்சள் கலர் கோளாறு ஏற்பட்டு வண்ணங்களை’ பகுத்தறியும் திறன் குறையும். இரத்தக் கசிவினால் மேகுலா பகுதியின் இரத்தம் தேங்கும் வீக்கம் உண்டாகும். இதை மேகுலா எடீமா என்பார்கள். இது கடைசியில் கண்களை பார்வையிழக்கச் செய்யும்.
மேகுலாவின் பாதிப்பினால் கண் பார்வை மங்கலாகுவதை மேகுலாபதி என்பார்கள். இந்த நிலையின் திசுக்களுக்கு ஆக்சிஜன் சப்ளை குறையலாம். இதை ஹைபாக்சியா என்பார்கள்.
முற்றிலும் பரவிய ரெடினோபதி
விழித்திரைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதால், புதிய இரத்தக் குழாய்கள் கட்டுக் கடங்காமல் அபரிமிதமாக உண்டாகின்றன. ஆனால் இந்த புது ரத்தக் குழாய்களினால் பயன் ஏதுமில்லை. இவை பழைய சேதமடைந்த ரத்தக் குழாய்களிலிருந்து உருவாகுவதால் பலவீனமாக இருக்கும். இவை எளிதில் உடைந்து விடும். அப்போது கண்களில் ரத்தப் பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டாகும். விழித்திரைகளில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டால் அவை கண்களை விட்டு தெறித்து விடும் அபாயம் ஏற்படலாம்.
மேற்கூறிய பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறிகள் – சிறிய சிகப்பு புள்ளிகள் விழித்திரையில் தெரியும். இதை மைக்ரோ அன்யூரிசம் என்பார்கள். பூச்சிகள் பறக்கும். கண்கள் திரை போட்டு பார்வையை மறைப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும், அடிக்கடி வெளிச்சம் தெரியும். கண் சிவக்கும்
விழித்திரை பாதிப்புகளை கண்டறிய உதவுவது ஃப்ளுரோசின் அஞ்ஜியோ கிராஃபி. இதன் மூலம் கண்களின் பின் பாகத்தில் உள்ள இரத்த நாளங்களை துல்லியமாக டாக்டர்களால் பார்க்க முடியும். ஒரு ஃப்ளுரெசன் (ஒளிரும்) சாயம் உடலின் இரத்தத்தில் ஏற்றப்படும். இந்த சாயம் நீல வெளிச்சத்தில் தெரியும். நோயாளியின் கையில் ஊசி மூலம் ஏற்றப்படும். உடல் ரத்தம் முழுவதிலும் சுற்றிப் பரவி கண்களிலும் தெரியும் அப்போது விழித்திரையின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். டயாபடிஸ் ரெடினோபதியை கண்டறிய இந்த முறை உதவுகிறது.
மேகுலோபதி நிலையை எட்டியவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டும் போதாது. உடனடியாக லேசர் போட்டோ கோயகுலேஷன் என்ற சிகிச்சையால் ரத்தக் கசிவை தடுத்து நிறுத்த வேண்டும். கண் பார்வையை காப்பாற்றுவதற்கு இது மிகவும் அவசியம். இந்த சிகிச்சையால் ஹைபாக்சியாவும் கட்டுப்படுத்தப்படும்.
க்ளுகோமா ( கண் அழுத்த நோய்)
க்ளுகோமா, கண்களின் பார்வை நரம்புகளில் கண் அழுத்தம் உண்டாகி பார்வை குறையை உண்டாக்கும் நோய். கண்களை பாதுகாக்கும் கண் திரவம், கருவிழியின் பின்புறம் உற்பத்தி ஆகி கண்களில் முன்புறம் வடிந்து விடும். க்ளுகோமாவில் இந்த வாய்க்கால்கள் தடைபடும், அடைபடும். வீட்டு குழாய்களில் அடைப்பு ஏற்படுவது போல் இது நேரிடும். வடிந்து போக வழியில்லாததால் நீர் தேங்கி கண் அழுத்தம் ஏற்படும். பார்வை நரம்புகள் தாக்குப் பிடிக்க முடியாதளவுக்கு கண்களின் நீர் தேங்கி விட்டால் க்ளுகோமா உண்டாகிறது. கண் நரம்புகளுக்கும் போகும் ரத்த ஓட்டம் தடைபடும். கண் நரம்புகள் செயலிழந்து விடும்.
க்ளுகோமாவின் அறிகுறிகள்
கண் வலி, கண் சிவந்தால், மங்கலான பார்வை, பார்வையில் கருப்புப் புள்ளிகள் நிறமாற்றங்கள் தெரியாமல் போதல், இரட்டை பார்வை போன்றவை ஆகும்.
பக்கவாட்டு காட்சிகள் மங்கலாக தெரியும். காரணம் கண் நரம்பின் ஓரம் பகுதிகளில் தான் நரம்பு தளர்வு தொடருகிறது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து க்ளுகோமாவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் க்ளுகோமாவால் இழந்த பார்வையை திரும்பிக் கொண்டு வர முடியாது.
டயாபடீஸ் கண்புரை நோயையும் உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதில் தவறக் கூடாது தவிர எப்பொழுதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடுகள் வைத்திருப்பது அவசியம். அது மட்டுமல்ல, ரத்த அழுத்தத்தையும் சரியான லெவலில் வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment