கனடாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு தெரிவிப்பது – டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு. மற்ற நீரிழிவு வியாதி இல்லாதவர்களை விட 15 வருடம் முன்பாகவே இதயக் கோளாறுகள் வரும் சாத்திய கூறுகள் அதிகம் என்றும் நீரிழிவு வியாதி இல்லாத ஆண்களுக்கு 55 வயதில் வரும் இதய நோய், நீரிழிவு உள்ளவர்களுக்கு 39 வயதில் ஏற்படலாம். பெண்களுக்கு 62 வயதில் வருவது, நீரிழிவு உள்ளவர்களுக்கு 46 வயதில் வரும்.
இதய நோய்கள் தலை தூக்க மற்றொரு மௌனமான வியாதி – உயர் இரத்த அழுத்தம். டைப் – 1 நீரிழிவில் உயர்ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக தென்படும். டைப் – 2 ல் அதிக பருமன், வளர்சிதை மாற்று கோளாறாக தென்படும். டைப் – 1 ல் நார்மல் ஆல்புமின் புரதம் வெளியேறினால் உயர் ரத்த அழுத்தம் தாக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. சிறுநீரில் ஆல்புமின் அதிகம் தென்பட்டால், ரத்த அழுத்தம் ஏறும்..
இந்த ஆய்வில் டைப் – 1 நீரிழிவு வியாதியுள்ளவர்களை சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
நீரிழிவில் இதய நோய்கள்
1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்
2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்
3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.
4.மாரடைப்பு, 30 சதவிகித நீரிழிவு நோயாளிகளை அறிகுறியின்றி, சப்தமின்றி தாக்கும்.
இதய நோய் வர வாய்ப்புகள்
1. வயது அதிகமாக
2. மெனோபாஸ்ஸை தாண்டிய பெண்கள்
3. பாரம்பரியம்
4. டயாபடிஸ் மெலிடஸ் (நீரிழிவு)
5. லிபிட் கோளாறுகள் (கொழுப்பு)
6. புகை பிடித்தல்
7. அதீத உடல் பருமன்.
மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.
சிகிச்சை முறைகள்
• வாழ்க்கை நிலை மாற்றம்
• உணவுக்கட்டுப்பாடு
• உடற்பயிற்சி உடல் எடை குறைத்தல்
• உயர் இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைப்பது அவசியத் தேவை.
• ரத்த சர்க்கரை அளவை ‘லிமிட்டில்’ வைக்க வேண்டும்.
• லிபிட் (கொழுப்பு) அளவுகளை குறைக்க வேண்டும்
• ஆஸ்ப்பிரின் மாத்திரைகளை, டாக்டரின் அனுமதியுடன் சாப்பிட்டு வரலாம்
• இதயத்தை காக்க சிறந்த மருந்து ‘ஆஸ்பிரின்’. ஆனால் இது வயிற்றில் ‘ஓட்டை’ போட்டு விடும். எனவே டாக்டரின் அனுமதி தேவை.
• உணவில் உப்பை குறைக்கவும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
No comments:
Post a Comment