தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

நோய் கண்டறியும் முறை


“திடமான, குழப்பமடையாத மனநிலை, புரிந்துக் கொள்ளும் திறமை இவை உள்ள மருத்துவர், அறிகுறிகளை கவனித்து, சரியான வியாதிகளை கண்டறிய வேண்டும். – சரக சம்ஹிதை”
ஆயுர்வேதம், ஆங்கில வைத்யம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் எதுவானாலும் சரி, நல்ல மருத்துவரை இனங்காட்டும் அறிகுறி அவரது நோய் கண்டறியும் திறமை. இதை நாம் டாக்டரின் ‘கை ராசி’ என்கிறோம். ஒரு மருத்துவரின் நோயறியும் திறமை, நோய் உண்டான காரணங்கள், சரியான சிகிச்சை முறைகள், நோயாளியின் உடலுக்கேற்ற மருந்துகள் இவைகளை உணர்ந்து செயல்படும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் தான் சிறந்த மருத்துவர்கள்.
ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். ‘ஆயுர்’ என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். ‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா இவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது. உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.
ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்டை கொள்கைகள்
• உடல் சிகிச்சை – உணவு, பத்தியம், மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி இவை தேவை.
• மன சிகிச்சை – மனத்தை சமநிலையில் நிறுத்த, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
• உடலுள் உறையும் “ஆத்மா”விற்கு – ஆன்மிக பயிற்சி பரிந்துரைக்கப்படும்.
• ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளை சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவ காலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு இவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகிறது.
• நோயாளியின் குறிப்பிட்ட வியாதிக்கு குறிப்பிட்ட மூலிகை கலவை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் மட்டுமில்லாது, நோயாளியின் நோய் தடுப்பு சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியம் மேம்பட சிகிச்சைகள் தரப்படும்.
• ஆயுர்வேத தத்துவங்கள் – ஆயுர்வேதம் சார்ந்திருக்கும் அடிப்படை வேதாந்தம் – எல்லா உயிர்களும், பொருட்களும் “பிரக்ருதி” (உடல் அமைப்பு) யிலிருந்து, நுட்பமான “புருஷ” (ஆத்மா) கலப்பினால் உருவானவை. அதாவது உடலும், உள் உறையும் ஆத்மாவும் நுட்பமாக இணைந்தவை.
• மனிதனும் பிரபஞ்சமும் ஒரே மாதிரியான பஞ்ச மூலங்களால் உருவானவை – பூமி அல்லது திடப்பொருள், நீர் அல்லது திரவப்பொருள், நெருப்பு (உடல், அக்னி, ஜாடராக்கினி), வாயு (காற்று) மற்றும் ஆகாசம் (உடல் ரீதியாக சொன்னால் உடலின் துவாரங்கள், வெற்றிடங்கள்).
ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. இவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரியமண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிலியசை (கரு – ழிuநீறீமீus), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன. “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாக வெளிப்படுகின்றன.
ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை. இந்த தோஷ ஏறு – மாறுகளை ஆயுர்வேத வைத்தியர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். வியாதியை கண்டுபிடிப்பதை விட, தோஷ மாறுதல்களை கவனிப்பதே முதல் செயல்.
ஒரு மனிதனின் குணத்தை ரஜாஸ், தாமஸ் சத்வம் என்பவை நிர்ணயிக்கும். இந்த முக்குணங்களை தவிர, மூன்று தோஷங்களும் கூட மனநிலையை பாதிக்கும். எனவேதான். ஆயுர்வேதம் உடல் சிகிச்சை அளிக்கும் போது மனசிகிச்சையையும் சேர்த்து செய்கிறது. இந்த 3 தோஷங்களை விரிவாக பார்ப்போம்.
வாதம்
பொது:- மூன்று தோஷங்களின் தலைவர் வாதம் – அதாவது வாயு. வாயு என்றால் அசைவது. உடலின் இயக்கத்தை நடத்துவது வாயுதான். கபத்தையும், பித்தத்தையும் “கன்ட்ரோல்” செய்வதும் வாயுதான்.
வாயுதோஷம்
வியாதிகள்: காக்காய்வலிப்பு, மனவியாதிகள், சரும நோய்கள், ஜுரம், அதீத உடல் பருமன், சோகை, நீரிழிவு, மலச்சிக்கல், பேதி, தைராய்ட், அட்ரீனலின் சுரப்பிகளின் நோய்கள்.
வாயுவின் வகை
1. பிராண – மூச்சுவிடுதல், உணவை உட்கொள்ளுதல், இதயம், உணர்வு இந்திரங்கள், ரத்தஓட்டம் இவற்றை பாதுகாப்பது. மணம், நரம்புகள், அறிவு – இவற்றை சீராக வைத்தல் உயிர் வாழ தேவை.
2. உதான – பேச்சுக்கு தேவை. உடல் வலிமை, மனவலிமை, ஞாபகசக்தி இவற்றை பராமரிப்பது.
3. சமான – உணவு ஜீரணிக்க, ஜீரணசாறுகள் சுரக்க. உணவை வாங்கி, ஊட்டச்சத்தையும், கழிவையும் பிரித்து. கழிவை வெளியேற்றுவது.
4. வியான – ஊட்டச்சத்தை உடலெங்கும் பரப்புவது. வியர்வை ஏற்படுத்துவது. கண்ணிமை திறந்து, மூட, உடல் நாளங்களை சுத்தம் செய்வது. விந்துவின் செயல்பாட்டுக்கு உதவுவது.
5. அபான – கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவது.
வாயுவின் வகைகளைப் பற்றி மேலும் பிராணாயாமத்தில் தரப்பட்டுள்ளது.
பித்ததோஷம்
பொது: பித்தம் என்றால் ‘உஷ்ணம்’ ஜீரண அக்னியால் உணவை செரிக்க உதவும். பித்தம் ‘தேஜஸ்’ – அக்னியின் பிரதிபலிப்பு. நாளமில்லா சுரப்பிகளை நடத்தும்.
பித்ததோஷ குறைபாட்டால் வரும் நோய்கள்: வயிறு சங்கடம், அதிகஅமிலசுரப்பு, ஜுரம், வாந்தி, காமாலை, சோகை, ஆஸ்த்துமா, சர்ம நோய்கள், கிருமி தொற்று நோய்கள்.
பித்தவகை
1. பாசக் – ஜீரணத்திற்கு பொறுப்பானது. மற்ற பித்தங்கள் இயங்க உதவுவது.
2. ரஞ்சக – ரத்தத்திற்கு நிறம் சேர்க்கும். ரத்த உற்பத்தியில் உதவும்.
3. சாதக – ஞாபகசக்தி, அறிவு செயல்பட உதவும். நரம்பு திசு வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.
4. ஆலோசகா – பார்வைக்கு உதவும்
5. ப்ராஜக – சர்ம நிறத்திற்கு பொறுப்பு, உடல் உஷ்ணநிலையை பராமரிக்கும்.
கபதோஷம்
பொது: நிலமும் நீரும் சேர்ந்தது கபம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்து சேர உதவும்
கபக்கோளாறினால் வரும் வியாதிகள்: ஜலதோஷம், நுரையீரல் நோய்கள், காமாலை, எக்ஸிமா, பருக்கள், ஆர்த்தரைடீஸ், மூளைக்காய்ச்சல், சிறு நீரக பாதிப்பு.
கபத்தின் வகை
1. அவலம்பகா – இதயத்தை, நுரையீரலை காக்கிறது. சுவாசத்திற்கு உதவும்.
2. கிலேடகா – வயிற்றில் உணவு “ஈரமாக” உதவும். அடி, மேல் வயிற்றை அமிலத்திலிருந்து பாதுகாக்கும். அதிக சூடு, குளிர் உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்றை காக்கும்.
3. தர்பாகா – மூளைக்கு தேவையான சக்தியை பெற உதவும். உஷ்ண மாறுதல்கள். நச்சுப்பொருட்கள் இவற்றிலிருந்து மூளையை பாதுகாக்கும். முதுகுத் தண்டை பாதுகாக்கும்.
4. போதகா – வாயை ஈரப்பசையுடன் வைப்பது, ருசியை அறிய உதவும்.
5. ஸ்லேசகா – மூட்டுக்கள் விறைப்பாகமல், எண்ணெய்பசையால் பாதுகாக்கும்.
ஆயுர்வேத சாஸ்திரங்கள் தோஷங்கள் அதிகமானாலோ குறைந்தலோ ஏற்படும் பாதிப்புகளை விஸ்தாரமாக விவரித்துள்ளன. எந்ததோஷம் கெட்டிருக்கிறது. என்பதை கண்டுபிடித்து விட்டால், பிறகு சிகிச்சை முறை சுலபமாகிவிடும். குணமும் தெரியும்.
நோய் கண்டறியும் முறைகள் விவரமாக, தெளிவாக ஆயுர்வேதத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலில் நோயாளியின் மருத்துவ ‘சரித்திரம்’ கவனித்து தெரிந்துக் கொள்ளப்படும். நோயாளியின் தாய், தந்தையர்களின் நோய்கள், இவைகளும் கேட்டு தெரிந்து கொள்ளப்படும். ஏனெனில் பல நோய்கள் பரம்பரையாக வரும். நோயாளியின் உடல்வாகு, வயது, வயிற்றின் கொள் திறன் இவை கணிக்கப்படும். பிறகு தலையிலிருந்து கால்வரை, பரிசோதிக்கப்படும். கை நகங்கள், கண், கண்ணிமைகள், நாசி, நாசித்துவாரங்கள், பற்கள், கை, கால் இவை அனைத்தும் பார்க்கப்படும். உடல் முழுவதும் கோளாறுக்களுக்காக கவனிக்கப்படும்.
எட்டு முக்கிய விஷயங்கள் – நாடித் துடிப்பு, சிறுநீர், மலம், நாக்கு, குரல், தொடும் உணர்ச்சி, பார்வை, உடல்தோற்றம் இவை பார்க்கப்படும். மருத்துவர் எந்த அவயம் அல்லது உடலின் எந்தபாகம் சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கிறது என்று கவனிப்பார். தவிர உடலின் எந்த பாகம், ஈரமாகவோ, உலர்ந்தோ, பருமனாகவோ, மெல்லியதாகவோ, மென்மையாகவோ, கடினமாகவோ, உணர்ச்சியுடனோ, இல்லை உணர்ச்சிகள் தெரியாமலோ இருக்கிறது என்று பரிசோதிப்பார்.
தோல் கரடுமுரடகவோ அல்லது மென்மையாக உள்ளதா என்பதும் கவனிப்படும்.
உடலின் வாசனையும், நாற்றமும் பிரத்யேகமாக கவனிக்கப்படும். சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்க்கின்றனவா என்று பார்க்கப்படும். ஏதாவது அடிவண்டல்கள் (ஷிமீபீவீனீமீஸீts) சிறுநீரில் தங்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படும். சிறுநீரின் அடர்த்தியை கண்டுபிடிக்க அதில் சிறிது எண்ணை விடப்படும். மலத்தின் நிறம், தோற்றம், நாற்றம், அடர்த்தி, பூச்சிகள் தென்படுவது இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவர் கவனிப்பார். ஜீரணசக்தியை அறிய, மலத்தை ஒரு தண்ணீர் நிறைந்த மண்பாண்டத்தில் கழிக்க வைத்து, மலம் தண்ணீரில் மூழ்குகிறதா இல்லையா என்று பார்க்கப்படும்.
இவை தவிர, நோயாளியின் ரத்தஒட்டம், தசை, கொழுப்பு, எலும்பு, வந்து இவை கண்காணிக்கப்படும். மூன்று வகை தோஷங்களில் மாறுபாடுகள், எங்கெங்கே இந்த மாறுபாடுகள் தாக்கியுள்ளன இவை கவனிக்கப்படும். நோயாளியின் உடல்பலம், அப்போதுள்ள சீதோஷ்ண நிலை, ஜீரண சக்தி, குணாதிசயங்கள், கோபதாபங்கள், வயது, உண்ணும்உணவு வகைகள், உண்ணும் நேரம், முறைகள், செய்யும் வேலை, உடற்பயிற்சி முறைகள் (நோயாளி செய்துகொண்டிருந்தால்) இவை அனைத்தும் தெரிந்து கொள்ளப்படும்.
ஒரு நல்ல மருத்துவர், நாடியை பிடித்தே வியாதியை சொல்லி விடுவார். இரண்டு கை மணிக்கட்டுகளிலும், நாடி பார்க்கப்படும். கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை மருத்துவர் தன் மூன்று விரல்களால் அழுத்தி, நோயாளியை தாக்கியிருக்கும்.
வியாதியின் தன்மை, மூன்று தோஷங்களின் மாறுபாட்டை உணரலாம். ஆயுர்வேத புத்தகங்கள் நாடிபிடித்து நோயை அறியும் முறைகளைப்பற்றி விரிவாக விளக்கியுள்ளன.
நோயாளியின் நாக்கை பரிசோதித்தால் ஒரளவு நோயை தெரிந்துக் கொள்ளலாம். உதாரணமாக, மங்கலான, நிறம் மங்கிய, வெளிறிய நாக்கு-சோகை.
மஞ்சள் நிறமுள்ள நாக்கு – கல்லீரல் கோளாறுகள்
வெள்ளை நிற நாக்கு – கபம் மாறுபடுதல்
நீல வண்ண நாக்கு – இதய நோய்கள்
சிகப்பு (அ) பச்சை – மஞ்சள் நிற நாக்கு – பித்த மாறுபாடு
கறுப்பு அல்லது பழுப்பு நிறநாக்கு – வாத மாறுபாடு.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நோயாளியின் முகத்தின் சுருக்கங்கள் கோடுகள், கவலை ரேகைகள் இவையும் கவனிக்கப்படும். சிறுநீரின் அளவும் நோயாளியின் வியாதியை காட்டும்.
கடைசியாக நோயாளியின் மனநிலை ஆராயப்படும். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை காக்கும். மனநிலை கோளாறுகளால், வலிப்பு, ஹிஸ்டீரியா, தூக்கமின்மை, பேதி, சித்தப்பிரமை, ஜுரம் இவைகள் உண்டாகலாம். வாததோஷங்கள் பாதிப்பால் மனச்சோர்வு, பயம் சோகம் இவை ஏற்படும்.
பித்ததோஷம் இருந்தால் பேராசை, பயம் போன்ற உணர்வுகளால் பித்தநீர் அதிகம் சுரக்கும். கபகுறைபாட்டால், பேராசையும், சோம்பேறித்தனமும் பெருகும்.
மேற்கொண்ட முறைகளால் வியாதியை தெரிந்துக் கொண்ட பின்னர்தான் ஆயுர்வேத மருத்துவர் சிகிச்சையை தொடங்குவார். அந்த சிகிச்சை உடலுக்கு மட்டுமில்லாமல், மனதிற்கும் கொடுக்கப்படும். நோயாளிக்கு ஏற்ற வைத்தியம் செய்யப்படும். அவர் வசிக்கும் இடத்தில் சூழ்நிலை, அவர் குடும்ப சூழ்நிலை இவற்றையும் மருத்துவர் கேட்டு அறிவார்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் உபயோகிக்கும் நவீனமுறை இயந்திரங்களும் சாதனங்களும் நோயை கண்டறிய உதவும்போது, பழங்கால ஆயுர்வேத முறைபாடுகள் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். இந்த நவீன முறைகள் மனித உலகின் இயற்கையான வளர்ச்சியால் தோன்றியவை.
பல நூற்றாண்டுகள் நாம் அடிமைகளாக இருந்ததால் இம்முறைகளின் வளர்ச்சி ஆயுர்வேதத்தில் பயன்படுத்த முடியாமல் போனது. ஆயுர்வேதத்தின் தடைப்பட்ட வளர்ச்சி தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த புதிய நோயை கண்டறியும் சாதனங்களும், முறைகளும் ஆயுர்வேதத்திலும் கடைப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது.

மூலம்


ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது மூலம். ஆசனவாய் (குதம்) உடலின் மேல்புற அடுக்காலும், மலக்குடலின் பகுதிகளாலும் உருவாக்கப்பட்டது. மலக்குடலின் சுவர்கள் கோழை – ஜவ்வு படலத்தால் மூடப்பட்டவை. வலியை உணரும் சக்தி குறைவு. ஆனால் ஆசனவாயின் நரம்புகளுக்கும் அதை சுற்றியுள்ள தோலுக்கும் வலி உணர்வு அதிகம். வட்டமான தசை வளையம் (ஆசனவாய் ஸ்பிஸ்டர்) ஆசனவாயை மூடி வைக்கிறது. இந்த வளையம் தானாகவே செயல்பட்டாலும், கீழ்ப்குதியை நம்மால் இறுக்கவோ, தளர்க்கவோ முடியும்.
மூலம் என்பது, மலக்குடல், குதம் இவற்றின் சுவர்களில் உள்ள ரத்த நாளமுடிச்சுகள் வீக்கம் அடைந்து விரிவது. நாளடைவில் ரத்தபோக்கு ஏற்படலாம். உள்ளுக்குள் இருக்கும் வரை, அதாவது மலக்குடல், ஆசனவாய் இவற்றின் எல்லை கோட்டின் (மலக்குடல் – ஆசனவாய் சந்திப்பு) மேல் இருக்கும் மூலம் உள்மூலம் எனப்படும். இந்த எல்லை சந்திப்பின் கீழே வரும் மூலம், வெளிமூலம் எனப்படும். இவை குதத்துக்குள்ளும் இருக்கும். வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும்.
ஆசனவாயின் சுவர்கள் ‘ஸ்பான்ஜ்’ போன்றவை. இரத்த அழுத்தம் அதிகமானால் இந்த சுவரில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிந்து, முறுக்கி கொண்டு முடிச்சு போல் வீங்கி விடுகின்றன. இது தான் மூலவியாதி.
காரணங்கள்
1. முதல் முக்கிய காரணம் – மலச்சிக்கல் தான். அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல். இதனால் மலம் கெட்டியாகி, கல் போல் ஆகிவிடும். இந்த இறுகிய மலம் வெளியேறும் போது, மென்மையான ஸ்பாஞ்ச் போன்ற ஆசனவாய் சுவர்களும் ரத்தக்குழாய்களும் பாதிக்ப்படுகின்றன.
2. ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய், திசுக்கள், பலவீனமாக, பிறவியிலிருந்தே இருக்கலாம். இதனால் மூலம் ஏற்படும்.
3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. வருடக் கணக்காக நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. இந்த காரணத்தை தற்கால நவீன டாக்டர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
4. குடலில் அல்சர் அல்லது புற்றுநோய் தோன்றினால் மூலம் உண்டாகும்.
அறிகுறிகள்
• முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தக்கசிவு இருக்கலாம்.
• இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்
• இது மலம் கழித்தபின் ஏற்படும்
• மூன்றாவது கட்டத்தில் சதைகள் நன்றாக வீங்கி, வெளியே தள்ளப்படும். ஆசனவாயின் வெளியேலேயே வீங்கிய சதைகள் நிரந்தரமாக இருக்கும் ரத்த ஒழுக்கும், வலியும் ஏற்படும். அரிப்பும், ரணமும் உண்டாகும்.
மூல நோய்களின் பாதிப்புகள்
மூல நோயால் ஆசனவாயில் வெடிப்புகள் ஏற்படும். இதை தவிர ஆசனவாயில் கட்டிகள் உண்டாகலாம். நாள்பட்ட மூலவியாதியால் ஆசனப் பாதையில் வேறு மார்க்கங்கள் உண்டாகும். இது பவுத்திரம் எனப்படும்.
சிகிச்சை முறைகள்
1. மலமிளக்கிகளால் மலத்தை சுலபமாக கழிக்க வைக்கலாம்.
2. எரிச்சல், வலி நிவாரணத்திற்கு, ஒரு “டப்” பில் வெந்நீரை நிறைத்து அதில் உட்கார்ந்திருக்கலாம். இதை சிட் பாத் என்பார்கள். தண்ணீரில் 10 டீஸ்பூன் திரிபால சூரணத்தை கலந்தால் மேலும் நல்லது.
3. இன்ஜெக்ஷன் ஸ்கேளேரோ தெரபி முறையால் மூலத்தை அழிக்கலாம்.
4. முதல் கட்ட நோயாளிகளுக்கு மலச்சிக்கலை சரிசெய்தாலே போதும். அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். இரண்டாவது கட்ட நோயாளிகளுக்கு “பேண்டிங்” சிகிச்சை மூலம் சரிபடுத்தலாம்.
5. மூலம் பெரிதானால், அதை வெட்டி எடுத்து, வெட்டுப்பட்ட இடங்களை “ஸ்டேப்ளர்” மூலம் இணைக்கலாம். வலி இல்லாத சிகிச்சை.
6. இந்த நவீன முறைகள் இருக்க, மேலும் புதுமையான லேசர் சிகிச்சையும் வந்து விட்டது.
ஆயுர்வேத சிகிச்சை
• சரகர் மருந்துகளால் மூலத்தை குணப்படுத்தி விடலாம் என்றார். ஆனால் சுஸ்ருதர் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தார். ஆயுர்வேதம், மலச்சிக்கல், வாய்வு, அஜீரணம் இவற்றுக்கான மருந்துகளை கொடுத்து மூலத்தை அழிக்கலாம் என்கிறது.
• கடுகுப்பொடி 1/2 தேக்கரண்டி, ஒரு மேஜைக்கரண்டி தேன் இவற்றை கலந்து பஞ்சால் ஆசனவாயில் தடவவும். இதை இரவு படுக்கப் போகும் முன் செய்யவும். இதே போல், கடுகெண்ணை, பப்பாளிச்சாறு, கற்றாழை சாறு இவை ஒவ்வொன்றிலும், ஓரு மேஜைக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளவும். இத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இதை ஆசனவாயில் தடவலாம்.
• பூண்டு “பல்லை” ஆசனவாயில் சொருகி வைக்கலாம்.
• கனிந்த வில்வம், பழக்கதுப்பு – 10 கிராம், சர்க்கரை – 3 கிராம், கருமிளகுப்பொடி – 7 மிளகுகளை பொடித்து செய்தது, ஏலக்காய் – 3, இவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
• எள்ளை கரைத்து ஆசனவாயில் பற்று போடலாம். உள்ளுக்கு 1/2 தேக்கரண்டி எள்ளை வெண்ணையுடன் உட்கொள்ளலாம்.
• உப்பு சேர்ந்த முள்ளங்கி சாறு 60 – 100 மி.லி. தினமும் 40 நாட்களுக்கு சாப்பிடவும்.
• மூலத்திற்கு சிறந்த பானம் -மோர் தினமும், பல மாதங்களுக்கு உப்பு, கருமிளகுப்பொடி கலந்த மோரை குடித்து வர வேண்டும். மோருடன் கடுக்காய், வெல்லம் இவற்றை சேர்த்து குடிக்கலாம்.
• கடுக்காய் கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து, இரவில் படுக்கும் முன் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
• ரோஜா மலரின் இதழ்களை (11 இதழ்கள்) 50 மி.லி தண்ணீரில் கரைத்து 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடிக்கும் போது வாழைப்பழம் உண்பதை தவிர்க்கவும்.
• சுக்கு கஷாயமும் மூலத்தை கண்டிக்கும்.
• கருணைக்கிழங்கு மூல வியாதியை குணமாக்கும் காய்கறி, இதை வைத்து மூலத்துக்கான ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆயுர்வேத மருந்துகள்
அபயாரிஷ்டம், பாஹீ சால குடம், குடஜபாணிதம், ஸ§குமாரக்ருதம், காங்காயான வடி, புஷ்யாணுக சூரணம், திரிபால சூரணம், நாககேசார போன்றவை.
இதர குறிப்புகள்
• நிறைய தண்ணீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு 10 டம்ளராவது தண்ணீர் குடிக்க வேண்டும்
• நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்
• ஆசனவாயின் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும்
• உடற்பயிற்சி, ஆசனங்கள் பலனளிக்கும்.
மூலம், ஆசனவாயில், பிரச்சினைகளில், உடலின், மலக்குடல், குதம், இரத்த அழுத்தம், மூலவியாதி, மலச்சிக்கல், ரத்தக்குழாய், திசுக்கள், உடலுழைப்பு, உடற்பயிற்சி, டாக்டர்கள், அல்சர், புற்றுநோய், மூலநோயில், பவுத்திரம், இன்ஜெக்ஷன், ஸ்கேளேரோ தெரபி, பேண்டிங், சிகிச்சை, மருந்து, அறுவை சிகிச்சை, ஆயுர்வேதம், வாய்வு, அஜீரணம், ஆயுர்வேத மருந்துகள்,
மூலம் ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது மூலம். ஆசனவாய் (குதம்) உடலின் மேல்புற அடுக்காலும், மலக்குடலின் பகுதிகளாலும் உருவாக்கப்பட்டது. மலக்குடலின் சுவர்கள் கோழை – ஜவ்வு படலத்தால் மூடப்பட்டவை. வலியை உணரும் சக்தி குறைவு. ஆனால் ஆசனவாயின் நரம்புகளுக்கும் அதை சுற்றியுள்ள தோலுக்கும் வலி உணர்வு அதிகம். வட்டமான தசை வளையம் (ஆசனவாய் ஸ்பிஸ்டர்) ஆசனவாயை மூடி வைக்கிறது. இந்த வளையம் தானாகவே செயல்பட்டாலும், கீழ்ப்குதியை நம்மால் இறுக்கவோ, தளர்க்கவோ முடியும். மூலம் என்பது, மலக்குடல், குதம் இவற்றின் சுவர்களில் உள்ள ரத்த நாளமுடிச்சுகள் வீக்கம் அடைந்து விரிவது. நாளடைவில் ரத்தபோக்கு ஏற்படலாம். உள்ளுக்குள் இருக்கும் வரை, அதாவது மலக்குடல், ஆசனவாய் இவற்றின் எல்லை கோட்டின் (மலக்குடல் – ஆசனவாய் சந்திப்பு) மேல் இருக்கும் மூலம் உள்மூலம் எனப்படும். இந்த எல்லை சந்திப்பின் கீழே வரும் மூலம், வெளிமூலம் எனப்படும். இவை குதத்துக்குள்ளும் இருக்கும். வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். ஆசனவாயின் சுவர்கள் ‘ஸ்பான்ஜ்’ போன்றவை. இரத்த அழுத்தம் அதிகமானால் இந்த சுவரில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிந்து, முறுக்கி கொண்டு முடிச்சு போல் வீங்கி விடுகின்றன. இது தான் மூலவியாதி.காரணங்கள்1. முதல் முக்கிய காரணம் – மலச்சிக்கல் தான். அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல். இதனால் மலம் கெட்டியாகி, கல் போல் ஆகிவிடும். இந்த இறுகிய மலம் வெளியேறும் போது, மென்மையான ஸ்பாஞ்ச் போன்ற ஆசனவாய் சுவர்களும் ரத்தக்குழாய்களும் பாதிக்ப்படுகின்றன.2. ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய், திசுக்கள், பலவீனமாக, பிறவியிலிருந்தே இருக்கலாம். இதனால் மூலம் ஏற்படும்.3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. வருடக் கணக்காக நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. இந்த காரணத்தை தற்கால நவீன டாக்டர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.4. குடலில் அல்சர் அல்லது புற்றுநோய் தோன்றினால் மூலம் உண்டாகும்.அறிகுறிகள்• முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தக்கசிவு இருக்கலாம்.• இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்• இது மலம் கழித்தபின் ஏற்படும்• மூன்றாவது கட்டத்தில் சதைகள் நன்றாக வீங்கி, வெளியே தள்ளப்படும். ஆசனவாயின் வெளியேலேயே வீங்கிய சதைகள் நிரந்தரமாக இருக்கும் ரத்த ஒழுக்கும், வலியும் ஏற்படும். அரிப்பும், ரணமும் உண்டாகும்.மூல நோய்களின் பாதிப்புகள் மூல நோயால் ஆசனவாயில் வெடிப்புகள் ஏற்படும். இதை தவிர ஆசனவாயில் கட்டிகள் உண்டாகலாம். நாள்பட்ட மூலவியாதியால் ஆசனப் பாதையில் வேறு மார்க்கங்கள் உண்டாகும். இது பவுத்திரம் எனப்படும்.சிகிச்சை முறைகள்1. மலமிளக்கிகளால் மலத்தை சுலபமாக கழிக்க வைக்கலாம்.2. எரிச்சல், வலி நிவாரணத்திற்கு, ஒரு “டப்” பில் வெந்நீரை நிறைத்து அதில் உட்கார்ந்திருக்கலாம். இதை சிட் பாத் என்பார்கள். தண்ணீரில் 10 டீஸ்பூன் திரிபால சூரணத்தை கலந்தால் மேலும் நல்லது.3. இன்ஜெக்ஷன் ஸ்கேளேரோ தெரபி முறையால் மூலத்தை அழிக்கலாம்.4. முதல் கட்ட நோயாளிகளுக்கு மலச்சிக்கலை சரிசெய்தாலே போதும். அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். இரண்டாவது கட்ட நோயாளிகளுக்கு “பேண்டிங்” சிகிச்சை மூலம் சரிபடுத்தலாம்.5. மூலம் பெரிதானால், அதை வெட்டி எடுத்து, வெட்டுப்பட்ட இடங்களை “ஸ்டேப்ளர்” மூலம் இணைக்கலாம். வலி இல்லாத சிகிச்சை.6. இந்த நவீன முறைகள் இருக்க, மேலும் புதுமையான லேசர் சிகிச்சையும் வந்து விட்டது. ஆயுர்வேத சிகிச்சை• சரகர் மருந்துகளால் மூலத்தை குணப்படுத்தி விடலாம் என்றார். ஆனால் சுஸ்ருதர் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தார். ஆயுர்வேதம், மலச்சிக்கல், வாய்வு, அஜீரணம் இவற்றுக்கான மருந்துகளை கொடுத்து மூலத்தை அழிக்கலாம் என்கிறது.• கடுகுப்பொடி 1/2 தேக்கரண்டி, ஒரு மேஜைக்கரண்டி தேன் இவற்றை கலந்து பஞ்சால் ஆசனவாயில் தடவவும். இதை இரவு படுக்கப் போகும் முன் செய்யவும். இதே போல், கடுகெண்ணை, பப்பாளிச்சாறு, கற்றாழை சாறு இவை ஒவ்வொன்றிலும், ஓரு மேஜைக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளவும். இத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இதை ஆசனவாயில் தடவலாம்.• பூண்டு “பல்லை” ஆசனவாயில் சொருகி வைக்கலாம்.• கனிந்த வில்வம், பழக்கதுப்பு – 10 கிராம், சர்க்கரை – 3 கிராம், கருமிளகுப்பொடி – 7 மிளகுகளை பொடித்து செய்தது, ஏலக்காய் – 3, இவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.• எள்ளை கரைத்து ஆசனவாயில் பற்று போடலாம். உள்ளுக்கு 1/2 தேக்கரண்டி எள்ளை வெண்ணையுடன் உட்கொள்ளலாம்.• உப்பு சேர்ந்த முள்ளங்கி சாறு 60 – 100 மி.லி. தினமும் 40 நாட்களுக்கு சாப்பிடவும்.• மூலத்திற்கு சிறந்த பானம் -மோர் தினமும், பல மாதங்களுக்கு உப்பு, கருமிளகுப்பொடி கலந்த மோரை குடித்து வர வேண்டும். மோருடன் கடுக்காய், வெல்லம் இவற்றை சேர்த்து குடிக்கலாம்.• கடுக்காய் கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து, இரவில் படுக்கும் முன் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.• ரோஜா மலரின் இதழ்களை (11 இதழ்கள்) 50 மி.லி தண்ணீரில் கரைத்து 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடிக்கும் போது வாழைப்பழம் உண்பதை தவிர்க்கவும்.• சுக்கு கஷாயமும் மூலத்தை கண்டிக்கும். • கருணைக்கிழங்கு மூல வியாதியை குணமாக்கும் காய்கறி, இதை வைத்து மூலத்துக்கான ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.ஆயுர்வேத மருந்துகள் அபயாரிஷ்டம், பாஹீ சால குடம், குடஜபாணிதம், ஸ§குமாரக்ருதம், காங்காயான வடி, புஷ்யாணுக சூரணம், திரிபால சூரணம், நாககேசார போன்றவை.இதர குறிப்புகள்• நிறைய தண்ணீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு 10 டம்ளராவது தண்ணீர் குடிக்க வேண்டும்• நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்• ஆசனவாயின் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும்• உடற்பயிற்சி, ஆசனங்கள் பலனளிக்கும்.

வயிறுயும் நீரிழிவும்



நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.
நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் நீக்கம் என்பார்கள். இதன் காரணங்களை வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ் இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.
இரைப்பை அடைப்பு
வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.
கேஸ்ட்ரோ பரேஸிஸ்
வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை ‘காலி’ செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது “வேகஸ்” நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம் பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.
கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது?
முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக்குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.
இதர காரணங்கள்
• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு
• வைரஸ் தொற்று நோய்கள்
• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி
• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்
• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய் டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா
• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை
• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.
அறிகுறிகள்
• நெஞ்செரிச்சல்
• மேல் வயிற்றில் வலி
• குமட்டல்
• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு பிறகு.
• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு
• எதுக்கலித்தல்
• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை
• அடிவயிறு உப்புசம்
• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு
• பசியின்மை
• வயிற்றுப் பகுதியில் இழுப்பு
விளைவுகள்
• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறு குடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.
• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.
• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீ£ழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.
இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்
1. என்டோஸ்கோபி
2. அல்ட்ரா சவுண்ட்
3. பேரியம் எக்ஸ்-ரே
இதர தீவிர பரிசோதனைகள்
1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.
2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன்-டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.
சிகிச்சை முறைகள்
• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.
• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.
• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.
உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.
இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6
வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.
மருந்துகள்
• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.
• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.
• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
வயிறுயும், நீரிழிவும், நீரிழிவு, ரத்தம், நரம்புகள், இரப்பை, கேஸ்ட்ரோபரேசிஸ், டயாபடிஸ், இரைப்பை அடைப்பு, பைலோரஸ், டியோடினம், அல்சர், கான்சர், வேகஸ், மூளை, வயிறு, அறுவை சிகிச்சை, வைரஸ், தொற்று நோய்கள், அனோரெக்ஷியா நர்வோசா, புலீமியா வியாதி, போதை மருந்துகள், அமிலாய் டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா, பார்க்கின்சன்ஸ், தைராய்டு, மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம், என்டோஸ்கோபி, அல்ட்ரா சவுண்ட், பேரியம் எக்ஸ்ரே, சிண்டிகிராஃபி, இன்சுலின், டாக்டர், மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன், மாத்திரைகள், ஆயுர்வேதத்தில்,
வயிறுயும் நீரிழிவும்
நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது. நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் நீக்கம் என்பார்கள். இதன் காரணங்களை வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ் இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.இரைப்பை அடைப்பு   வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.கேஸ்ட்ரோ பரேஸிஸ் வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை ‘காலி’ செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது “வேகஸ்” நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம் பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது? முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக்குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.இதர காரணங்கள்• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு• வைரஸ் தொற்று நோய்கள்• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள் • தசை நார்கள் பாதிப்பு – அமிலாய் டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா • நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.
அறிகுறிகள்• நெஞ்செரிச்சல்• மேல் வயிற்றில் வலி• குமட்டல்• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு பிறகு.• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு• எதுக்கலித்தல்• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை• அடிவயிறு உப்புசம்• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு• பசியின்மை• வயிற்றுப் பகுதியில் இழுப்பு விளைவுகள்• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறு குடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீ£ழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்1. என்டோஸ்கோபி2. அல்ட்ரா சவுண்ட்3. பேரியம் எக்ஸ்-ரேஇதர தீவிர பரிசோதனைகள்1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன்-டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.சிகிச்சை முறைகள்• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.மருந்துகள்• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

தாழ்நிலை சர்க்கரை ஹைபோகிளைசீமியா


சர்க்கரை நோயின் கடுமையான மறுபக்கம் – திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவது. இது உயிருக்கு ஆபத்து. டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும். இதை ‘ஹைபோகிளைசீமியா’ என்கிறார்கள்.
சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லி கிராம்/ டெஸி லிட்டர் வரை இருக்கலாம். இந்த நிலை குறையவும் கூடாது. கூடவும் கூடாது. இதில் மாற்றம் ஏற்படும் காரணங்கள்:-
1. இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் ‘டோஸ்’ அதிகமானால்
2. பட்டினியிருந்தால், அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேர இடைவெளி நேர்ந்தால்
3. உடற்பயிற்சி அதிகமானால்
4. சில மருந்துகள். நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் கூட ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.
5. கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த உணவுகள். சில உணவுகளை (ப்ருக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்க முடியாமல் போதல்
6. வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள்
7. அபூர்வமாக கணையத்தில் கட்டி (இதனால் அதிக இன்சுலீன் சுரக்கும்) அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது.
ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை நேரங்களிலும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே ‘எபினெப்ரின்’
என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ‘ரிலீஸ்’ செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.
ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். பழச்சாறு கூட கொடுக்கலாம். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும். பிறகு ரொட்டி போன்றவற்றை தரலாம்.
இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிகநேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.
ஹைபோகிளை சீமியா டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது.
இந்த அபாயகரமான நிலை, ஒரு ‘வாய்’ சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவும்.
தாழ்நிலை, சர்க்கரை, ஹைபோகிளைசீமியா, சர்க்கரை நோய், ரத்தத்தில், ஹைபோகிளைசீமியா, இன்சுலின், உடற்பயிற்சி, மருந்துகள், நீயுமோனியா, க்வுனைன், கார்போஹைடிரேட்ஸ், உணவுகள், மது அருந்துவது, கணையம், அட்ரீனலின், பிட்யூடரி, எபினெப்ரின், ஹார்மோன், அட்ரீனல் சுரப்பி, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு, மனக்குழப்பம், தலைவலி, கண்பார்வை மங்குதல், சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா,
மூளை,
தாழ்நிலை சர்க்கரை ஹைபோகிளைசீமியா
சர்க்கரை நோயின் கடுமையான மறுபக்கம் – திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவது. இது உயிருக்கு ஆபத்து. டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும். இதை ‘ஹைபோகிளைசீமியா’ என்கிறார்கள்.சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லி கிராம்/ டெஸி லிட்டர் வரை இருக்கலாம். இந்த நிலை குறையவும் கூடாது. கூடவும் கூடாது. இதில் மாற்றம் ஏற்படும் காரணங்கள்:-
1. இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் ‘டோஸ்’ அதிகமானால்
2. பட்டினியிருந்தால், அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேர இடைவெளி நேர்ந்தால்
3. உடற்பயிற்சி அதிகமானால்
4. சில மருந்துகள். நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் கூட ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.
5. கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த உணவுகள். சில உணவுகளை (ப்ருக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்க முடியாமல் போதல்
6. வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள்
7. அபூர்வமாக கணையத்தில் கட்டி (இதனால் அதிக இன்சுலீன் சுரக்கும்) அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது.
ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை நேரங்களிலும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே ‘எபினெப்ரின்’ என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ‘ரிலீஸ்’ செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.
ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். பழச்சாறு கூட கொடுக்கலாம். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும். பிறகு ரொட்டி போன்றவற்றை தரலாம்.
இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிகநேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.
ஹைபோகிளை சீமியா டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது.
இந்த அபாயகரமான நிலை, ஒரு ‘வாய்’ சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவும்.

வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி


நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.
நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் நீக்கம் என்பார்கள். இதன் காரணங்கள் வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ். இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.
இரைப்பை அடைப்பு
வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.
கேஸ்ட்ரோ பரேஸிஸ்
வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை ‘காலி’ செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது “வேகஸ்” நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம்பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.
கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது?
முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக் குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.
இதர காரணங்கள்
• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு
• வைரஸ் தொற்று நோய்கள்
• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி
• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்
• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய்டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா
• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை
• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.
அறிகுறிகள்
• நெஞ்செரிச்சல்
• மேல் வயிற்றில் வலி
• குமட்டல்
• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு
பிறகு.
• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு
• எதுக்கலித்தல்
• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை
• அடிவயிறு உப்புசம்
• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு
• பசியின்மை
• வயிற்றுப் பகுதியில் இழுப்பு
விளைவுகள்
• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறுகுடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.
• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.
• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீரிழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.
இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்
1. என்டோஸ்கோபி
2. அல்ட்ரா சவுண்ட்
3. பேரியம் எக்ஸ்-ரே
இதர தீவிர பரிசோதனைகள்
1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதிரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.
2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன் -டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.
சிகிச்சை முறைகள்
• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.
• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.
• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.
உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.
இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.
மருந்துகள்
• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.
• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.
• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

சர்க்கரை வியாதியின் வகைகள்


உலக சுகாதார அமைப்பு மூன்று விதமாக சர்க்கரை வியாதியை குறிப்பிடுகிறது. டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு. இவை மூன்றும் கணையத்தின் பீடா செல்கள் தேவையான அளவு இன்சுலினை சுரக்க முடியாமல் போவதால் தான் உண்டாகும். இருந்தாலும் காரணங்கள் வித்யாசமாகும்.
பழைய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1
• இது இன்சுலின் சார்ந்த நிலை.
2. டைப் 2
• இது இன்சுலின் சாரா நிலை.
3. கர்ப்ப கால நீரிழிவு
மேற்சொன்னவை உலக சுகாதார குழுமம் நிர்ணயித்த பழைய வகைகள்.
புதிய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1
நோய் பாதுகாப்பு சக்தியின் குறைபாடு
தானாக உண்டாகும்/ காரணமின்றி ஏற்படும் டயாபடீஸ்
2. டைப் 2
முக்கியமாக இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் டயாபடீஸ்
முக்கியமாக இன்சுலின் சுரப்பதின் குறைபாடுகளால் வரும் டயாபடீஸ்.
3. கர்ப்ப கால டயாபடீஸ்
4. இதர வகைகள்
பிறவி கோளாறுகளால் பாதிக்கப்பட்ட கணைய பீடா செல்களால் ஏற்படுவது.
இன்சுலின் எதிர்ப்பு, இன்சுலின் தவறாக செயல்படுவது இவற்றால் வரும் டயாபடீஸ்.
கணையத்தை பாதிக்கும் நோய்களால் வருவது. (கணைய டயாபடீஸ்)
என்டோ கிரினோபதியால் (குஷிங் சின்ட்ரோம்) உண்டாவது.
மருந்துகளால் உண்டாகும் டயாபடீஸ் (குளுகோ – கார்டிக் காய்ட்ஸ்) தொற்று நோயால் உண்டாவது
அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வரும் டயாபடீஸ்
இதர மரபணு கோளாறுகளால் வருவது
குறிப்பு
இந்த புதிய பட்டியலை உலக சுகாதாரக் அமைப்பு அறிவிக்க காரணம் பழைய பட்டியலில் உள்ள இன்சுலின் டிபென்டட் டயாபடிக் மெலிடஸ்,
நான் இன்சுலின் டிபென்டட் டயாபடிக் மெலிடஸ் போன்ற குழப்பமான குறிப்பீடுகளை எடுப்பதற்காக.
இப்போது இந்த பிரிவுகள் ஒவ்வொன்றையும் விவரமாக பார்ப்போம்.
1. டைப் 1
• உடலில் தானாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் (ஆடோ – இம்யூன்) கணைய பீடா செல்கள் அழிந்து விடுவதால் ஏற்படும் நீரிழிவு இது.
• இந்த டைப் டயாபடீஸீக்கு எந்த நிலையிலும் தேவையான சிகிச்சை இன்சுலின் ஊசி போடுவது தான். அடிக்கடி ரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதிப்பது அவசியம். வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
• இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாவிட்டால், கேடோ அசிடோஸிஸ்   ஏற்பட்டு “கோமா” நிலைக்கு போக நேரிடும். இந்த டைப் நோயாளிகளுக்கு தான் சர்க்கரை நோயின் சகல பாதிப்புகளும் ஏற்படுகிறது.
• டைப் 1 வகைகள் மேலும் சில ஆடோ – இம்யூன் வியாதிகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். அவை கிரேவ்ஸ் வியாதி, தைராய்டிடைஸ், ஆடோ இம்யூன் அடிசன்ஸ் வியாதி, ஓவரிகளின் தோல்வி, சோகை.
• இந்த வகை நோய் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் வரும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வரும் சர்க்கரை வியாதிக்கு வித்யாசங்கள் உண்டு. மொத்த டயாபடீஸ் நோயாளிகளில் 5 விழுக்காடு நோயாளிகள் டைப் 1 னால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை வியாதி பிறந்த குழந்தைக்கும் வரலாம். சிறுவர்களுக்கு வருவதால் இது ஜுவைனல் டயாபடிஸ் என்றும் கூறப்படுகிறது.
• டைப் 1 நோயாளிகளுக்கு இருக்க வேண்டிய ரத்த சர்க்கரை அளவு 120 மிகி / டெ.லி. அடிக்கடி தாழ் நிலை சர்க்கரை குறைவை அடைபவர்களுக்கு டாக்டர்கள் 140 – 150 மி.கி / டெ.லி. வரை கூட இருக்கலாம் என்கிறார்கள். 200 மி.கி. / டெ.லி. அளவுக்கு மேல் போனால் அடிக்கடி சிறுநீர் போவது, உடல் உபாதைகள் தோன்றலாம். 300 க்கு மேல் போனால் டாக்டரை அணுக வேண்டிய நிலை. தாழ் நிலைக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
• மனச்சோர்வு அடையாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் நார்மல் வாழ்க்கை வாழலாம். விழிப்புணர்வு, சரியான பராமரிப்பு, சரியான அளவு இன்சுலினை செலுத்திக் கொள்வது, வாழ்வு முறை மாற்றங்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
2. டைப் 2
• இது இன்சுலின் சாராத நிலை
• இது 30 வயதுக்கு மேற்பட்டவர்களை, நடுத்தர வயதினரை பாதிக்கும்.
• பழைய முறையில், இன்சுலின் சாராத பிரிவு என்று குறிப்பிடப் பட்டது. இந்த டைப் 2 தான் அதிகமாக காணப்படும் நீரிழிவு வியாதி. சேதப்பட்ட பீடா’ செல்கள், இன்சுலின் ரிசெப்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உடல் நிலை, மற்றும் கல்லீரல் சர்க்கரை உற்பத்தி அதிகமாதல் போன்றவை இந்த டைப்பின் அம்சங்கள். இந்த டைப் 2 வை சில டாக்டர்கள் இரண்டு வகையாக – பருமனானவர்கள் மற்றும் பருமனில்லாதவர்கள் – என்று பிரிக்கின்றனர்.
• உடல் பருமன் அதிகம் உள்ளவர்களில் 55 சதவிகிதத்தினருக்கு இந்த டைப் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. மொத்த சர்க்கரை நோயாளிகளில் 95% டைப் 2 நோய்க்கு ஆளாகின்றனர். இந்த உடல் பருமன் இடுப்பை சுற்றி, “டயர்” போல் அடிவயிறு இருப்பவர்களுக்கு டைப் – 2 வரும் சாத்ய கூறுகள் அதிகம். அதுவும் வயதும் ஆகி, குண்டாகவும் இருந்தால் இதன் தாக்கம் ஏற்படுவது சகஜம். சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டால் கணையத்தை ஊக்குவிக்கும் பல மருந்துகள், ஏற்பாடுகளால் சரிவர சிகிச்சை மேற்கொள்வது சுலபமாகும். இன்சுலின் ஊசி தேவைப்படாமல் போகலாம். ஆனால் டைப் – 2 அறிகுறிகள் தென்பட நாளாகும்.
• குறைந்த இன்சுலின் சுரப்பு, இன்சுலினை புறக்கணிக்கும் தன்மை மற்றும் இன்சுலின் ரிசெப்டர்களின் குறைபாடு என்ற மூன்று வித விஷயங்களின் சேர்க்கையால் டைப் – 2 ஏற்படுகிறது.
• உடற்பயிற்சி இல்லாத, உடலுழைப்பும் இல்லாத சோம்பல் வாழ்க்கை வாழ்பவர்கள் இந்த டைப் – 2 க்கு ஆளாவார்கள்.
• டைப் 2 டயாபடீஸிக்கு பரம்பரை ஒரு வலுவான காரணம். இதை விரிவாக பின்னால் பார்ப்போம்.
• அபூர்வமாக டைப் 2 வியாதியஸ்தர்களுக்கு உடல் நீர்ச்சத்து குறை நிலை தீவிரமாக உண்டாகும்.
• டைப் – 2 டயாபடீஸில் அறிகுறிகள் பல வருடங்களுக்கு தென்படாமல் போகும். இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
3. கர்ப்ப கால நீரிழிவு
இது ஒரளவு டைப் – 2 நீரிழிவை போன்றது.
• கர்ப்ப ஹார்மோன்களால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்.
• குழந்தை பிறந்த உடன் இந்த நீரிழிவு மறைந்து விடும். தற்காலிகமான நிலை தான் இது.
• தற்காலிகமாக இருந்தால் கூட இதற்கு சிகிச்சை செய்யா விட்டால் தாயாருக்கும், கருவுக்கும் ஆரோக்கிய குறைவு ஏற்படும். அதிக உடல் எடையுடன் ( 4 கிலோக்கு மேல்) குண்டான குழந்தை பிறக்கும். பல குறைபாடுகள் – இதய நோய், நரம்பு மண்டல பாதிப்பு – இவை பிறவி நோய்களாக – குழந்தையை பாதிக்கும். அதிக இன்சுலின், பித்தநீர், இவை பல சிக்கல்களை உண்டாக்கும்.
•கர்ப்பகால சர்க்கரை நோய் குறை பிரசவம் நேரிட காரணமாகலாம்.
• குழந்தை இறந்து பிறக்கக் கூடும். தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
• பிறந்த குழந்தை பிற்காலத்தில் நீரிழிவு நோயாளியாக வாய்ப்புகள் அதிகம்.
• இதனால் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவம் வரை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
3. “இதர வகைகள்” பிரிவில் உள்ள பிறவிக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட கணையத்தால் ஏற்படும் டயாபடீஸ், 25 வயதிலேருந்து உண்டாகலாம். இந்த டைப் இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் வரும். ஆனால் இன்சுலினிலேயே குறைகள், கெட்டு போன இன்சுலின் இவற்றால் வருவது டைப் 4.
4. நாம் புரிந்து கொள்ள வேண்டியது – பிறவிக் கோளாறுகள் இரு வகையில் கணையத்தை தாக்கும். ஒன்று நல்ல, சுத்தமான இன்சுலினை கணையம் சுரந்தாலும், அளவு போதாமல் போகும். மற்றொன்று இன்சுலின் ஹார்மோன் கெட்டிருக்கலாம்.
5. 4 – புற்றுநோய் தவிர கணையத்தை முற்றிலும் முடக்கும் வியாதிகளால் வரும் டயாபடீஸ் 4 டைப். இது குறைவான ஊட்டச்சத்தின் காரணமாக ஏற்படலாம் என்று முன்பு கருதப்பட்டது. இந்த கருத்து கைவிடப்பட்டு இப்போது நாளமுள்ள சுரப்பிகள், கணைய நோய்கள் தான் காரணம் என்று மாற்றப்படுகிறது. கணையத்தில் கற்கள்,  ஃபைராய்ட்ஸ் இருப்பதை அல்ட்ரா ஸோனோகிராஃபி, கேட் ஸ்கான் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இவைகளால் கண்டுபிடித்து விடலாம்.
6. டைப் 4 – பல ஹார்மோன்கள் – வளர்ச்சி ஹார்மோன், கார்டிஸோன் குளுகோஜன் – இன்சுலினுக்கு எதிரிகளாகலாம். இவை அதிகம் சுரந்து டயாபடீஸை உண்டாக்கலாம். இந்த டைப் டயாபடீஸ், அதிகம் சுரக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தினால், குணமாகி விடும்.
7. டைப் 4 – மருந்துகளால் ஏற்படும் நீரிழிவு வியாதி. குளுகோகோர்டி காய்ட்ஸ். சிறுநீர் போக உதவும் தியாஸைட் டையூரிடிக்ஸ். பினெ டாய்சின் போன்ற பல மருந்துகள் டயாபடீஸை ஏற்படுத்தும்.
8. டைப் 4 – ரூபெல்லா, அடினோ வைரஸ், ஸைடோமெகலோ வைரஸ் போன்றவற்றாலும் வைரஸ் தொற்றால் வரும் மம்ஸ் போன்றவற்றாலும் கணைய பீடா செல்களை பாதித்து டயாபடீஸ் வர காரணமாகலாம்.
9. டைப் 4 (உடல் தசைகள் விறைத்துப் போய் ‘கட்டை’ போல் கெட்டியாவது) போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், டயாபடீஸால் தாக்கப்படுவார்கள்.
10. டைப் 4 – மரபணு கோளாறுகள் இவைகளாலும் டயாபடீஸ் தோன்றலாம்.