தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

சர்க்கரை வியாதியின் சரித்திரம்


1. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
2. பழங்கால இந்தியர்கள் சர்க்கரை நோயை கண்டுபிடிக்க, ஒருவரின் சிறுநீரை எறும்புகள் மொய்க்கிறதா இல்லையா என்பதை கவனித்தனர்.
3. ஆயுர்வேத தூண்களான சரகர், சுஷ்ருதர் இவர்களுக்கு இந்த குறைபாட்டின் பாரம்பரியத் தன்மை மட்டுமின்றி, அதிக தாகம், வாய் உலர்வது, சிறுநீரில் சர்க்கரை இருப்பது போன்ற அடையாளங்கள் தெரிந்திருந்தன. இளவயது நீரிழிவு, வயதாகி வரும் நீரிழிவு நோய்களின் வித்யாசங்களை அறிந்திருந்தனர். சிகிச்சை முறைகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த நோயை அவர்கள் ‘மதுமேகம்’ – இனிப்பு சிறுநீர் வியாதி என்று அழைத்தனர். சர்க்கரை நோயை குறிப்பிட சீனர்கள், கொரியர்கள், மற்றும் ஜப்பானியர்கள் இதே அர்த்தத்தை குறிக்கும் வார்த்தைகளை தங்கள் மொழிகளில் பயன்படுத்தினர்.
4. இந்த சிறுநீர் இனிப்பாக மாறுவது பழங்கால கிரேக் கர்களுக்கும், சீனர்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தெரிந்திருந்தது. கி.மு.1500ல் எகிப்தியர் எழுத உபயோகித்த பாப்யூரஸ் ஓலைச்சுவடிகளில் அதிக சிறுநீர்கழிப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
5. “டயாபடீஸ்” என்ற வார்த்தையை கப்பாடோசியாவை சேர்ந்தவரான அரிடேயஸ் அறிமுகப்படித்தினார். ஊடுருவல், உட்செல்வது இதன் அர்த்தம். செல்சஸ் என்னும் மருத்துவர் டயாபடீஸ் பற்றிய மருத்துவ ரீதியான விவரங்களை வெளியிட்டார். அரிடேயஸ்ஸீம், செல்ஸஸ§ம் கி.பி. 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு நோயின் காரணங்கள் தெரியவில்லை.
6. ஆங்கிலத்தில், 1425ம் ஆண்டில் எழுதப்பட்ட மருத்துவ நூலில் டயாபடீஸ் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது.
7. 1675ல் தாமஸ் வில்லீஸ், டயாபடீஸ் என்ற வார்த்தையுடன், மெல்லிடஸ் என்ற வார்த்தையையும் இணைத்தார். மெல்லிடஸ் என்றால், லத்தீன் பாஷையில் ‘தேன்’ என்று அர்த்தம். தாமஸ் வில்லீஸ், சிறுநீரில் வெளியாகும் சர்க்கரை, ரத்தத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டுமென்று நிர்ணயித்தார்.
8. 1776ல் மாத்யூ டாப்சன், சிறுநீர் இனிக்கும் காரணம், சிறுநீரிலும், ரத்தத்திலும் ஒரு வகை சர்க்கரை சேர்ந்திருப்பதே என்று உறுதியாக சொன்னார்.
9. நீரிழிவு நோய்க்கும் கணணயத்துக்கும் சம்மந்தம் உண்டு என்று கூறியவர் கான்லே.
10. 1796ல் உணவுக்கட்டுபாடு, நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம் தேவை என்றார் ரோலிலே என்பவர்.
11. 1841ல் பொசார்டார்ட், உணவு முறை மாற்றம் நீரிழிவை கட்டுப்படுத்த அவசியம் தேவை என்று வலியுறுத்தினார்.
12. மாவுச்சத்தால் ஆன உணவைப் பற்றியும், அது ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும், கல்லீரலில் கிளைகோஜின் இருப்பதையும் முதலில் கண்டுபிடித்தவர் கிளாண்ட் பெர்னார்ட்.
13. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய டாக்டர் மான்யூ, புகழ் பெற்ற நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர். இது பரம்பரை வியாதி என்று சொன்னவர் அவர்.
14. நீரிழிவு வியாதி உடலின் பலகுறைபாடுகளின் மொத்த வெளிப்பாட்டே என்ற கண்டுபிடிப்பு அமெரிக்க டாக்டர் பிரடெரிக் எம். ஆலனால் தெரிய வந்தது.
15. 1869ல் பால் லாங்கர்ஹான், என்ற ஜெர்மானிய விஞ்ஞானி கணைய தசைகளில் உள்ள சிறுதீவுகள் என்ற பகுதியை கண்டுபிடித்தார். இது ஒரு முக்கிய மைல்கல். இவர் பெயரே இந்த தீவுகளுக்கு வைக்கப்பட்டது.
16. 1889ல் கணையத்திற்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள சம்மந்தத்தை திட்டவட்டமாக நிரூபித்தவர்கள் ஜோசப் வான் மெரிங் மற்றும் ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி என்ற ஜரோப்பிய விஞ்ஞானிகள் நாய்களின் கணையத்தை அறுவை சிகிச்சையால் எடுத்து விட்ட பிறகு பார்த்ததில் நீரிழிவு வியாதிக்கான அறிகுறிகள் அனைத்தும் நாய்களுக்கு தோன்றின. நாய்கள் இறந்தும் விட்டன. நீரிழிவு கணையத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொன்னவர்கள் இவர்கள்.
17. 1910ல் சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே – ஷா ஃ பர் என்ற எடின் பர்க்கை சேர்ந்த விஞ்ஞானி, நீரிழிவு நோயாளிகள், கணையத்திலிருந்து உண்டாகும் ஒரு வேதிப்பொருளின் குறைபாடு உடையவர்கள் என்பதை தெரிவித்தார். இந்த வேதிப்பொருளை இன்சுலின் என்று அழைக்கலாம் என்று கூறியவர் இவர். லத்தீன் பாஷையில் இன்சுலா என்றால் ‘தீவு’ என்று அர்த்தம். கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் “தீவு” களை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது.
18. 1921, நீரிழிவு நோயாளிக்கு பெரும் நிவாரணத்தை அளித்த ஆண்டு. வான் மெரிஸ் மற்றும் மின்கோவ்ஸ்கி ஆரம்பித்த ஆராய்ச்சியை தொடர்ந்த சர் பிரடெரிக் கிராண்ட் பேன்டிங் மற்றும் சார்லஸ் ஹெர்பர்ட் பெஸ்டும் மேலும் முன்சென்று, நாய்களுக்கு உண்டாக்கப்பட்ட நீரிழிவு வியாதியை, ஆரோக்கியமான நாய்களின் கணைய “தீவு” களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளால் குணப்படுத்த முடியுமென்று நிருபித்து காட்டினர். இந்த இருவருடன் கோல்லிப் என்ற இராசயன நிபுணரும் சேர்ந்து, டோரண்டோ பல்கலைகழகத்தில், மாடுகளின் கணையத்திலிருந்து இன்சுலினை எடுத்து சுத்தப்படுத்தி காட்டினர். முதல் நோயாளி, 1922ல் இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டார். இவ்வாறு ஆரம்பித்தது இன்சுலின் சிகிச்சை இதற்காக பாண்டிங் மற்றும் பரிசோதனை கூடத்தின் டைரக்டர் மேக்லியாட் இருவருக்கும் 1923-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
19 இந்த இருவர்களின் பெருந்தன்மையை பாருங்கள். இவர்களுக்கு கிடைத்த நோபல் பரிசை ஆராய்ச்சி குழுவில் இருந்த அனைவருடனும் (முக்கியமாக பெஸ்ட் மற்றும் கோல்லிப்புடன்) பகிர்ந்து கொண்டனர். இது மட்டுமல்ல, இன்சுலின் கண்டுபிடிப்பை தனி உரிமை செய்து அவர்கள் விற்கவில்லை. அதன் செய்முறையை இலவசமாக வழங்கினர். இன்சுலின், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுவதற்கும் அவர்கள் கட்டுப்படுத்தாமல் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இன்சுலின் சிகிச்சை உலகெங்கும் வேகமாக பரவியது.
20. தற்போது டைப் 1, டைப் 2 என்றழைக்கப்படும் நீரிழிவு நோயின் பிரிவுகளின் வித்தியாசத்தை துல்லியமாக, 1936ல் எடுத்துக்காட்டியவர் சர் ஹெரால்ட் பெர்சிவல் ஹிம்ஸ்வொர்த்.
21.  1942ல் ஸல்ஃபோனைலிரியாஸ் மருந்துகள் அடையாளம் காட்டப்பட்டன.
22. இன்சுலினின் புரத வரிசையை கண்டுபிடித்தவர் ஸர் ஃப்ரெடரிக் சான்ஜர். இதற்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது..
23. சில நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின், எதிர்மறை விளைவுகளை – அதாவது இன்சுலின் எதிர்க்கும் ஆன்டி – பாடீஸ் – உருவாக்கும். பாக்டீரியாக்களை அழிப்பதற்கான இரத்தத்தில் உண்டாக்கப்படும் பொருள்). இந்த ஆன்டி –  பாடீஸ் இன்சுலினுடன் சேர்ந்துவிடும். டிரேசர் இன்சுலின் எனும் பொருளால் ரத்தத்திலுள்ள குறிப்பிட்ட ஆன்டி – பாடீஸ் அளவை நிர்ணயிக்க முடியும். இந்த செய்முறை ரேடியோ இம்யூன்சி எனப்படும். இதைக் கண்டுபிடித்தவர்கள் ரோஸ்லின் யல்லோ மற்றும் சாலமோன் பெர்சன் இதற்காக யல்லோவுக்கு 1977ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment