தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

கணையம்


கணையம் 75 கிராம் எடையும், சுமார் 15 செ.மீ. நீளமும் உடைய ஓரு உறுப்பு. வயிற்றின் பின்புறத்தில் அடிவயிற்றுக்கும், முதுகெலும்புக்கும் நடுவே உள்ளது. ஒரு பக்கம் முன் சிறுகுடலின் வளைவிலும், மறுபக்கம் மண்ணீரலையும் தொட்டுக் கொண்டிருக்கும்.
கணையம் ஜீரணத்திற்கான என்ஸைமை சிறு குடலுக்கும், ஹார்மோன்களை இரத்தத்துக்கும் அனுப்பும். என்ஸைமைகளை தவிர கணையத்தின் முக்கிய வேலை மூன்று ஹார்மோன்களை சுரப்பது.
இதன் வால் பகுதியின் உட்புறத்தில் லாங்கர்ஹான் திட்டுகள் என்னும் நாளமில்லாச் செல்களினால் ஆன திட்டுகள் உள்ளன. எண்ணிக்கையில் சுமார் பத்து லட்சம் உள்ளன. இந்த லாங்கர்ஹான் செல்கள் ‘ஆல்பா’ செல்கள் எனவும் பீட்டா செல்கள் எனவும் இருவகைப்படுகின்றன. இதில் ஆல்பா செல்கள் குளுகோகான் என்னும் ஹார்மோனையும் பீட்டா செல்கள் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கின்றன. நமது உடலில் நடைபெறுகின்ற வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் பங்கு கொள்ளும் இந்த இரண்டு ஹார்மோன்களும் கீழ்ப்பெரும் சிரையினுள் சுரக்கப்பட்டுக் கல்லீரலை சென்றடைகின்றன.
இந்த இரண்டு ஹார்மோன்களை தவிர சோமடோஸ்டேசன் என்ற ஹார்மோனும் கணையத்தால் சுரக்கப்படுகிறது. இந்த மூன்று ஹார்மோன்கள்.
1. இன்சுலின் – திசுக்களுக்கு குளுகோஸை கொண்டு சேர்க்கிறது.
2. குளுகோகான் – இன்சுலினுக்கு எதிர்மாறான தன்மை உடைய ஹார்மோன். ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் கல்லீரலை தூண்டி அது சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை ரிலீஸ் செய்யுமாறு தூண்டும்.
3. சோமடோஸ்டேசன் – மேலே சொன்ன 2 ஹார்மோன்களையும் தேவைப்படும் போது, சுரக்காமல் தடுக்கும்.
கணைய பாதிப்புகள்
கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் உற்பத்தி குறையும் அல்லது நின்று விடும். அப்போது தான் நீரிழிவு உண்டாகிறது. கணைய நோய்களில் முக்கியமானது கணைய அழற்சி
கணைய பாதிப்புகளுக்கு இதர காரணங்கள்.
1. மல்டிபில் என்டோக்ரைன் நாளமில்லா சுரப்பிகளின் புற்றுநோய் / புற்று நோயில்லாத கட்டிகள், வீக்கம் இந்த வியாதி நாளமில்லா சுரப்பிகளை தாக்கும் அபூர்வ வியாதி.
2. தசை அழிவு நோய்: இந்த வியாதி உடலின் தசைகளை தாக்கும் கொடிய நோய் தீவிரமானால் டயாபடீஸ், மற்றும் பல தீவிர நோய்களை உண்டாக்கும்.
3. அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிக் கலவைகள், இதர துணை நோய்கள்.
4. மரபணுக்களின் மாற்றம்.
5. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்.
6. ஹேமோகுரோமடோசிஸ் இந்த பரம்பரை வியாதி, உடலில் அதிக அளவு இரும்புச்சத்து சேருவதால் வரும்.
கணையத்தின் ‘பீடா’ செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்வது ஒரு தொடர்ச்சியான நிரந்தர செயல்பாடு. இந்த செயல் ரத்தத்தின் உள்ள குளூக்கோஸ் அளவை சார்ந்திருப்பதில்லை. அதிகமானால், பீடா செல்களில் (செல்லின் சைடோப்ளாஸத்தில் உள்ள இடம்) சேமித்து வைத்து கொள்ளும்.
சாப்பிட்டவுடன் ரத்த குளூக்கோஸ் அளவுகள் ஏறும். கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களில் உள்ள ‘பீடா’ செல்கள் உடனே இன்சுலினை சுரக்கும். சுரந்து ரத்தத்துக்கு செலுத்தும். உடலில் உள்ள செல்களில் மூன்றில் இரண்டு பங்கு செல்களுக்கு குளூக்கோஸை கொடுக்க இன்சுலின் உதவுகிறது. எரி சக்தியாகவோ. இல்லை சேமித்து வைக்கவோ என்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது இன்சுலின். கல்லீரலில் மற்றும் தசை செல்களில் அதிக குளூக்கோஸ் கிளைக்கோஜன் என்ற பெயரில் சேமிக்கப்படும். குளூக்கோஸ் லெவல் குறைந்தால் உடனே குளூக்கோஸாக உருவெடுத்து குறையை நிறை செய்யும். இதற்கு உதவுவது இன்சுலினுக்கு எதிர்மாறான ஹார்மோன் குளுகோகான். இந்த பரிமாற்றம் நேர்வது கல்லீரலால் மட்டும் தான். தசை திசுக்கள் இந்த பரிமாற்ற திறன் அற்றவை.
கணையம் நல்ல உழைப்பாளி – இதயம்போல்

No comments:

Post a Comment